பக்கம்:சமணமும் தமிழும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 167 விசயமங்கலம் : ஈரோடு தாலுகாவில் விசயமங்கலம் இரயில் சிலயத்திலிருந்து வடக்கே 4மையில் உள்ள மேட்டுப் புத்தூரில் ஒரு சமணக் கோயில் உண்டு, இது அ தீகவரர் கோயில். இங்குச் சில சமண சிற்பங்கள் காணப்படுகின்றன. விசயமல்கலத்தில் சந்திரப்பிரப தீர்த்தங்கரின் ஆலயம் உள்ளது', பெருங்கதை என்னும் காவியத்தை இயற்றிய கொங்குவேன் என்னும் சமணர் இவ்வூரில் வாழ்ந்தார் என்பர். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் என்பவரும் இவ்வூரினர் என்பர். இவ்வூரில் சமண உருவங்கள் உன்னன' விசயமங்கலத்துக்கு அருகில் அர சண்ணாமலை என்னும் குன்று இருக்கிறது. இக்குன் றின் மேல் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது அக்கோயில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனைமலை:பொள்ளாச்சி தாலுகாவில் பொள்ளாச்சியி லிருந்து தென்மேற்கே 71 மைலில் இருக்கிறது. இன் ஆருக்கு மேற்கே சமணக்கல் அர்ச்சும் என்னும் ஒரு குன்று உண்டு. இந்தப் பெயதே இங்குச் சமணர் இருக் தனர் என்பதை தெரிவிக்கிறது. இங்குள்ள பானை மலைக் காடு என்ஓம் இடத்தில் ஒரு சமணக் கோயில் உண்டு. வெள்ளோடு : மேலே குறிப்பிட்ட பூத் துறைக்கு 5 மைல் தூரத்தில் உள்ளது. அதிகாதர் என்னும் ரிஷப தீர்த்தங்கரரின் கோயில் இங்கு உண்டு. திங்களூர் : ஈரோடு தாலுகாவில் உள்ளது. இவ்வூர், புஷ்பாாதர் என்னும் சமண தீர்த்தங்கரரின் கோயில் ஒன்று இங்கு இருக்கிறது." முடிகொண்டம் : கொள்ளேகால் தாலுகாவில் உன் எது இவ்வூர், முற்காலத்தில் சமணர் இங்கு இருந்தனர். முடி கொண்ட சோழபுரம் என்பது இதன் பழைய பெயர். இவ்வூர்க் குளத்தின் தென் சகரப் படியில் உன்ன சிதைந்து போன சாசனம் ஒன்று சக ஆண்டு 1031-இல் எழுதப் 1. M. A. R. 1891, P. 2., 1010.11. P. 24., 1919-20. P. 7. 2. Top. List. P. 221. 3. 614 of 1:905.