பக்கம்:சமணமும் தமிழும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

176) சமணமும் தமிழும் ஆண்டுதோறும் சமணக் கோயில்களில் திருவிழாக் கள் ஈடைபெறுவது உண்டு. உற்சவ காலத்தில் உற்சவ மூர்த்திகளையும் பரிவாரத் தெய்வ உருவங்கள்பும் விமா னத்திலும் வாகனங்களிலும் எழுந்தருளச் செய்கிறார்கள். சமண மூர்த்திகள் வீதிவலமாக எழுந்தருளும்போது அம் மூர்த்திகளுக்கு முன்னர் தருமச் சக்கரம் எழுந்தருளும்; சைவ வைணவக் கோயில்களில் முறையே திரிசூலமும் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளுவதுபோல. ஒன்றின் மேல் ஒன்முக அமைந்த முக் குடைகளுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளுகிறார். பண்டைக் காலத்தில் பாடலிபுரம் (கடலூர்), ஜின காஞ்சி (காள்புரம்) முதலிய இடங்களில் சமணர்களின் மடங்கள் இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் உள்ள சமண மடம் சித்தாமூரில் உள்ள மடம் ஒன்று தான். சித்தாமூர் தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுக் காவில் இருக்கிறது. சித்தாமூர், வீரனமூர் விழுக்கம், பெருமாண்டூர். நவக்கிராமம், வேலூர், தாயனர் முதலிய ஊர்களில் இருக்கும் சமணர்கள் சேர்த்து சித்தாமூர் மடத் இத் தலைவரை ஏற்படுத்துகிறார்கள், இந்த மடத்துத் தவவருடைய பெயாவது : டெல்லி கொல்லாபுர ஜின கஞ்சி பெனுகொண்டா சதுர் சித்த சிம்மாசனதிஸ்லா ஸ்ரீமத் அபிரய லஷ்மீ சேனபட்டாரக பட்டாசாரிய வர்ய சுவாமிகன் என்பது. சைனர்கன் வியாபாரிகளாகவும் உபாத்திமார்களாக வும் பயிர்த்தொழில் செய்பவர்களாகவும் உத்தியோகஸ்தர் களாகவும் பல தொழில் செய்ருெர்கன். வடகாட்டுச் சைனரைப் போலத் தமிழ்காட்டுச் சைனர் பெருஞ்செல்வம் உடையவர் அல்லர். இவர்களில் சிலர் சைவ சமயத்தவராக மாறி வருகிறார்கள்.