பக்கம்:சமணமும் தமிழும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

198 சமணமும் தமிழும் விஷ்று புராணம், மச்சபுராணம், தேவி பாகவதம் இவற்றிற் க. தப்பட்ட இக்கதையைத் திரட்டிச் சேர்த்து, திருமாலின் கூமுகிய மாயாமோகர் சமண பௌத்த மதங் களைப் போதித்தார் என்.- பதும் புராணம் கூறுகின்றது. அக்கினி புராணம் கூறுவதாவது : தைத்தியருக்கும் தேவருக்கும் நடைபெற்ற போரில் தைத்தியர் தேவரை வென் றனர், தோல்வியுற்ற தேவர் திருமாலிடஞ் சென்று அடைக்கலம் புகுர்து முறையிட்டுத் தமது குறையை நீக்கு மாறு அவரை வேண்டினர். அதற்கிணங்கிய திருமால், சுத்தோதனருக்கு மாயா மோகர் என்னும் மகனாகப் பிறந்து தைத்தியரை மயக்கி அவரைப் பௌத்தராக்கினார். எஞ்சி தின்ற தைத்தியருக்கு மாயையைப் போதித்து அவரை அருகதராக்கினார். இவ்வாறு சமண பௌத்த மதங்கள் உண்டாயின என்று இப் புராணம் கூறுகின்றது. காஞ்சிமகாத்மியம் என்னும் நூலிலும் இது போன்ற கதை கூறப்பட்டுள்ளது. (க+-ஆம் அத்தியாயம்.) தாரகன் மக்களான வித்துமாலி, தாரகாக்ஷன், கமலாஷன் என்ப வர் தடுத்தவஞ் செய்து, நினைக்கும் இடங்களிற் பறந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த பொன், வெள்ளி, இரும்பு என் நாம் உலோகங்களினாலாய முப்புரங்களைப் பெற்று அதில் வாழ்ந்து வந்தனர். இவ்வசுரரின் ஆற்றலைக் கண்டு பொரு மையும் அச்சமுங்கொண்ட தேவர்கள் திருமாவிடஞ் சென்று அசுரரை அழிக்க வேண்டுமென்று அவரை வேன் டிக் கொண்டனர். வழக்கம்போலவே திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் சேர்ந்து அசோரயா கஞ் செய்து கணக்கற்ற பூதங்கள் யுண்டாக்கி அவற்றை ஏவி முப்புரங்களை அழித்து வரும்படி கட்டளையிட்டார். சென்ற பந்தங்கள் முப்புரங்களை அழிக்க முடியாமல் புறக் காட்டி ஓடின. பின்னர், திருமால் முப்புராதியரைச் சூழ்ச்சியினால் வெல்லக் கருதித் தமது உடம்பினின்றும் ஒருவரை உண்டாக்கி அவரைப் பார்த்து, ' நீ புத்தனென்று அழைக்கப்படுவாய், நீ முப்புராதியரிடஞ் சென்று சண பங்கம் என்னும் நூலைப் போதித்து அவரைச் சிவ நெறியி