பக்கம்:சமணமும் தமிழும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் (பௌத்தர்களும்கூட) தம் பள்ளிகளிலே ஊர்ச் சிறுவர் களுக்குக் கல்வி கற்பித்துவந்தனர். இதனாலேயே பாட சாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்ஓம் பெயர் உண்டா விற்று, (பள்ளி என்றால் சமணப்பள்ளி அல்லது பௌத் தப்பள்ளி என்பது பொருள்). சமணர்களின் சாத்திர தானம் பிள்ளைக்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்று விடவில்லை. செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும், இறத் தோருக்குச் செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும், தம் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள், அச்சுப் புத்தகம் இல்லாத அந்தக் காலத்திலே பனை ஏகெளில் நூல்களை எழுதிவந்தார்கள், ஒரு சுவடி எழுதுவதற்குப் பல நாட்கள் செல்லும். பொருள் செலவும் (எழுத்துக்கல்) அதிகம். ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் எழுதி வைத்துக்கொள்ள முடிந்தது. பொருள் அற்றவர் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமய நூலைப் பல பிரதிகன் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள். கி. பி. 10-ஆம் நூற்றாண்டிலே கன்னட காட்டில் இருந்த, சமண சமயத்தைச் சார்ந்த அத்திழுப்பெ என்னும் அம்மையார் தமது சொந்தச் செல் விலே, சாந்திபுராணம் என்னும் சமணசமய நூலை ஆயிரம் பிரதிகள் எழுதுவித்துத் தானம் செய்தார் என்ப, சமணசமயம் செழித்து வளர்வதற்கு மற்றொரு காரணமாயிருந்தது யாதெனின் அவர்கள் மேற்கொண் டிருந்த தாய்மொழிப் பிரசாரம் ஆகும். சமணசமயத்தார், பௌத்த சமயத்தாரைப் போலவே, தாங்கள் எந்தெந்த காட்டிற்குப் போகிறார்களோ அந்தந்த காடுகளில் வழங்கு கிற தாய்மொழியிலே தங்கள் மத நூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டு மக்கள் எளிதிலே இந்த மதக் கொன்கைகளை அறிந்துகொண்டு அவற்றைக் கைக்கொள்ள முடிந்தது, பிராமணர், தம் வைதீக மத நூல்களை மக்க ளுக்கு விளங்காத மொழியில் எழுதிக்கொண்டதோடு அந்