பக்கம்:சமணமும் தமிழும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் குன்றிய வரலாறு 67 ணப் பன்ளிகளும் அங்கிருந்ததையும் அறியலாம். அக் கோயில்கள் பிற்காலத்தில் அழிந்து மறைந்துவிட்டன. கி. பி. 7, 8, 9. ஆம் நூற்முண்டுகளில் சமயப்போர் தமிழ் காட்டில் மும்முரமாக நடைபெற்றது என்று கூறி னோம். அக்தர் சமயப் போர் முக்கியமாக மூன்று மதங் களில் நிகழ்ந்தது, இந்து" மதத்துக்கும் சமண சமயத் துக்கும், இந்துமதத்துக்கும் பௌத்த மதத்துக்கும், பௌத்தசமயத்துக்கும் சமணசமயத்துக்கும் 3 மும் முனைப் போர் ஆக நடைபெற்றது. இந்துக்கள் சமணரை யும் பௌத்தரையும் தாக்கினார்கள். சமணர் இந்துக்களை யும் பொத்தர்களையும் தாக்கினார்கள். பௌத்தர் இந்துக் காயும் சமணர்களையும் தாக்கினார்கள். இவ்வாறு ஒரே காலத்தில் மும்முனைப் போர் நடந்தது. இந்தப் போரில் இந்துமதம் பௌத்தமதத்தை எவ்வாறு அழித்தது என்பதை எமது - பௌத்தமும் தமிழும்" என்னும் நாலில் கூறியிருக்கிறோம். இங்கு “இந்து” மதம் சமண மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை ஆராய்வோம். இந்தச் சமயப்போர் நடந்த காலத்திலே இந்திமதம் சைவம் வைணவம் என்னும் இரண்டு பிரிவுகளைக்கொன் டிருந்த போதிலும், பிற்காலத்தில் ஏற்பட்டதுபோல் பெரிய பிளவு ஏற்பட்டு சைவ வைணவப் போர் நிகழ்ந்தது போல அல்லாமல் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருத்தி சமணசமயத்தையும் பௌத்தமதத்தையும் கடுமையாகத் தாக்கின. (பிற்காலத்தில் மும்முரமாக நடத்த சைவ வைணவப் போராட்டம், பௌத்த சமண சமயங்கள் பெரி நம் ஒலேகிப்போன காலத்தில் நடந்தது.) சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது, கொடு மைப்படுத்தல், சழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் திகழ்த்ததைக் காண்கிறோம். இல்லாறு இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள இவற்றைச் சைவ வைணவ நூல்களில் ஆங்காங்கே காணலாம். தமித்த காண்க