பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

வருவதை முன்னேயே தடுத்து நிறுத்திய ஜப்பானிய நிலையையும் இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்.

வாஸ்கோடகாமா வரவிற்குப் பிறகே தென்னிந்தியாவில் ஐரோப்பிய வரவும் கிறிஸ்துவ மத உறவும் நுழைந்தன என்று சொல்ல முடியா விட்டாலும், தழைத்தன என்று சொல்லலாம். காரணம், தோமையர் வரவு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருந்தது. போர்ச்சுகீசு டச்சுக்காரர், டேனிஷ்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகியோருடைய வரவு ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன. இவர் தம் வரவிற்கு முதல் நோக்கம் இந்தியாவுடன் வணிகம் புரிவதற்கே என்று வரலாற்று ஆசிரியர்கள் பலரும் தொடர்ந்து எழுதுகின்றனர். நாமும் நம்பி வருகின்றோம். இஃது ஒரு மேலோட்டமான முடிவே இவர்களுடைய வரவு வணிக வரவு, உறவு என்பதைவிட அரசியல் ஆதிக்க வரவு என்பதுதான் உண்மை. சான்று,

(1) முதலில் வந்திறங்கிய வாஸ்கோடகாமா ஒரு வணிகர் அல்லர். ஒரு சமயவாணரும் அல்லர். அவர் ஒரு கப்பல் படைத் தலைவர், அவரை இந்தியா நோக்கி அனுப்பி வைத்தவர் போர்ச்சுக்களில் உள்ள ஒரு வியாபாரி அல்லர்; போர்ச்சுக்கலின் மாமன்னர். இந்தியப் பயணத்துக்குரிய சாதனங்களையும், நிதியையும், கொடுத்துக் கேப்டன் வாஸ்கோடகாமாவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.

(2) டச்சு ஆங்கிலக் கம்பெனிகள் வெறும் தனியார் வணிகக் கம்பெனியாக மட்டும் இயங்கவில்லை. அவை, ஹாலந்து, ஆங்கிலேய நாடுகளின் அரசர்களின் ஒப்புதல் பெற்று உரிமம் பெற்ற பின்னரே, கிட்டத்தட்ட அந்தந்த அரசுகளின் முகவர்களாக இயங்கின. இதனால்தான் இந்தியாவில் வேறு வேறு கம்பெனிகளுக்கு இடையே நடந்த போர்களுக்கு பூசல்களும் அந்தந்தக் கம்பெனிகளுக்கு இடையே நடந்த