பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

104 மட்டுமே ஆள்பவர்களுக்கு இருந்தனா. மக்களின் அன்றாட வாழ்க்கையிலே, அவர்களின் ஆட்சி புகுந்ததில்லை இப்போது நிலைமை தலைகீழ் மாற்றம், அரிசி எந்த அளவு உண்ணலாம் என்று அளவிட ஆள்பவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆஸ்திரேலியா சென்றாவது உணவுப் பொருள் கொண்டுவா, முடியாவிட்டால், ஆட்சிப் பீடத் தைவிட்டு வெளியே போ' என்று கூறும் உரிமை மிக் களுக்கு இருக்கிறது. மக்களின் தனி வாழ்க்கையிலே இப் போது ஆள்பவர்களுக்கு, அதிகமாக அளவு இடம் ஏற் பட்டுவிட்டது. எனவே, மக்களுக்கு, ஆள்பவர்களின் தன்மை,நோக்கம், திட்டம் இவைகனைப் பற்றிக் கண் காணிக்கும் பொறுப்பு அதிகரித்துவிட்டது. இந்தக் கண் காணிப்பு வேலைக்கு மேடைப் பேச்சு முக்கியமான துணை யாகிறது. மேடைப் பேச்சு முக்கியம் என்பது சரி, ஆனால் முடியுமா? நம்மால் ஆகுமா? என்ற எண்ணம் பிறக்கக் கூடும். வானத்தில் வட்டமிடும் பறைைகளைக் கண்டு ஆச்சரி யப்பட்டு, பிறகு அதுபோன்று பறக்கும் சாதனம் கிடைத் தால் பயன் அதிகமாக இருக்குமே என்று மனிதன் எண்ணத் தொடங்கினான் - அந்த எண்ணத்தை ஆக்கித் தந்தது. அலைகடலை அடக்கும் மரக்கலம் அமைத்தோர். ஆழ் கடலுக்குள்ளே செல்லும் கலம் அமைத்தோர் விண்ணல் பறக்கும் விமானம் அமைத்தோர், தொலைவிலுள்ளதைக் கேட்கவும் காணவும் கருவிகள் கண்டுபிடித்தோர், காட் டாறுகளைக் கட்டுக்குக் கொண்டுவந்தோர், நீரிலே நெருப் பின் சக்தியை கண்டறிந்தோர், அனைவரும் நம் போல் மனிதரே. அவர்களால் முடிந்தது. நம்மால் ஆகும் என்ற நினைப்பு அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாயிற்று. கள் அவை சாத்தியமானபோது மேடைப் பேச்சு சாத்திய மாகாது. பேசாமலிருப்பது வேண்டுமானால் சிரமம் சிந்தையை அடக்கியே சும்மா இருப்பதரிது - பேசுவது எளிது பேசுவதை, ஒழுங்குக்கும் முறைக்கும் கட்டுப் படுத்துவதுதான், மேடைப் பேச்சு