பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105 எனவே. இந்நாளில் மேடைப் பேச்சுக்குத் தேவையும் பயனும் உள்ளது என்பது உணர்ந்து, அதனை நாமும் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் கொள்வது வேலை. முதல் பிறகு மேடைப் பேச்சு எங்ஙனம் அமைதல் வேண்டும் என்பனவற்றைக் கவனிக்கவேண்டும். மேடைப் பேச்சு தென்றலர், புயலா? தீஞ்சுவையுள்ள இளநீரா, அல்லது வேம்பின் சாறு போன்றதா. எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்ற கேள்வி நிச்சயமாகத் தோன்றும்; இந்த எண்ணம், ஓரு சருக்குமேடை மேடைப் பேச்சுக்குத் தங் களைத் தயாரித்துக் கொள்வோர் மிக ஜாக்கிரதையாக ஊன்றி நடக்கவேண்டிய இடம் இது. இனிமையாகப் பேசவேண்டும் என்ப தொன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மேடைச் பேச்சு முறை பயிலக் தொடங்குவது ஆகாதகாரியமட்டுமல்ல -தேவையுமற்றது இதனால், கடுஞ் சொல பேசுவதே சிலாக்கியம் என்பதல்ல பொருள், சொல் சுடுமா? சுவை பயக்குமா என்ப தொன்றையே நோக்கமாகக் கொள்வது கூடாது என்ப தைத்தான் கூறுகிறேன். அந்த முறையில் பேசுவது. ருக்மணி கலியாணம்; ராமபட்டாபிஷேகம், சீமந்தனி கதை போன்ற காலட்சேபம் நடத்துபவருக்கு வேண்டுமா னால், சாத்தியமாகக் கூடும் - பயனும் கிடைக்கக் கூடும் படியை அரைக்காலாக்க் காய்ச்சிய பால்,அதிலே கற் கண்டுக் தூள் குங்குமட்பூவின் குழம்பு: இவ்வளவும் போதாதென்று பக்தியும் ஆசையும் கூட்டித் தரப்படக் கூடும். ஆனால் மேடைப் பேச்சு, காலட்சேபமல்ல விவா தத்துக்குரிய உயிர்ப் பிரச்னைகளைப்பற்றிய கருத்துக்களை வெளியிடுவது. இனிமையான எல்லோருக்கும் கிடைக்கும் படிசெய்யும் நாவாணியம் அல்ல. மேடைப் போச்சு. வாய் பொத்தி, கைகட்டிக் கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமல்ல. அருள்வாக்கல்ல, பேசுபவர்கள். இன்ன பொருள்பற்றிப் பேசிடுக என்று பணித்திட பேசுபவன் அது போலவே நடத்தும் வசனம் சங்கீதமு மல்ல வாழ்க் கையுடன் தொடர்புகொண்ட பிரச்னைகளைப்பற்றி, மக்கள் குழப்பமான கருத்து கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது