பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75 லும், காவிய உருவிலும் கூறினரே கசடனே! அவர்கள் கூற்றுப் பொய்யா? அந்த நாளில் அவர்கள் கண்ட தத்து வத்தைத் தகர்க்க உன்னால் ஆகுமா?அதனைச் சந்தேகிப்பது தகுமா? அதை ஒழித்தாக வேண்டும் என்று பேசும் அள வுக்கு உனக்குத் துணிவா? என்று கேட்கத் தோன்றும் பலருக்கு அல்ல சிலருக்கு. ஆனால் அந்தச் சிலரும் நேரடி யாகக் கேளார். பழங்காலத்திலிருந்து வீதி எனும் தத்து வம் இருந்த காரணத்தாலேயே அந்தத் தத்துவம் நீக்கப்பட முடியாதது; கூடாதது: என்று யாரும் வாதிட முடியாது. கனியும் அழுகுவது காண்கிறோம்...அந்த அழுகிய பழத் திலே பிறகு புழு நெளியபும் காண்கிறோம். மதுரம் தரும் பழமாயிற்றே. நமது தோட்டத்திலே கிடைத்த தாயிற்றே இதிலே நெளிவது புழுவாக இருக்க முடியாது: பழத்திலே சுவை இருக்கும்; புழு எப்படி இருக்கும் என்று யாராவது வதாடுவார்களா? பழம் அழுகுவது போல, மலர் கசங்கி மணத்தை இழந்து பிறகு கெட்ட வாடை கொள்வதுபோல தழை சருகு ஆவது போல, கட்டடங்கள் கலனாகிக் குப்பை மேடு ஆவது போல, பலப்பல தத்துவங்களும்,ஏற்பாடுக ளும் காலச்சிறையிலே கிடந்து கிடந்து கெடுவதும், பல கேடுகளை உற்பத்தி செய்வதும், இயற்கையாக ஏற்படும் ஓர் நிசுழ்சி: இதனை உணர மறுப்பது உலகை அறியா தார் போக்கு. விதி. ஒரு நோய்; நெடுநாளாக மனித சமுதாயத்தில் இருந்து வருவது. அதன் பிடியும், வேகமும் குறைக்கப் படுவதற்கு மற்ற நாட்டினர் எடுத்துக்கொண்ட முயற்சி களின் அளவையும், திறத்தையும்விடச் சற்று அதிகமான அளவிலும், திறத்திலும் நாம் விதியெனும் நோயைக் குறைக்க அல்ல - வளர்த்திட வேலை செய்துகொண்டிருந் தோம். அதனாலேதான் விதிக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலை, இங்கு மிக மிகக் கவலைதரும் அளவுக்கு இருக்கிறது. கண்முன் நடைபெறும் பல நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கத் தெரியாத பருவம் குழந்தைகளுக்கு. ஆனால் காரணம் கண்டு பிடிக்கும் திறமை ஏற்படாவிட்டாலும் சிந்திக்காமலிருப்பதில்லை.