பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74. பிடிப்பும், மார்பு வலியும் போகக் காளுேம். மேலும் ஏதோ ஓர்ங்கை புதுவிதமான அலுப்பும் ஏற்பட்டிருக்கிறதுஎன்று கந்தசாமி கூறுகிறள். ஆமப்பா கந்தசாமி! இப்பொது நான் நாலு நாட்கள் கொடுத்த சூரணம் ஜூரத்தை போக்க மட்டுந்தான். இனித்தரப்போகும் மருந்தினால்தான் கை கால் பிடிப்பும் மார்பு வலியும் அலுப்பும் நீங்கும்: இரத்த சுத்தி ஏற்படும். புதிய பலம் உண்டாகும் என்று கூறுகி றார். நல்ல மருத்துவர் இதைக் கூறுவார். நல்லறிவுள்ள நோயாளி இது போலவே நடப்பார். ஜூரம் என்பது உடலிலே முள் தைத்தது போலத் திடீரென உடலுக்குள் புகுந்தது அல்ல. முள்ளை எடுத்து விடுவது போல் ஜூர நோயை மட்டும் நீக்கிவிட-ஜுரம் என்பது கூட்டுச்சரக்கு. அடிமைத்தனமும் அது போன்றதே. அக்கிய ஆட்சி கடும் ஜூரம் போன்றது. அது நீங்கி இப்போது. வீதிக்கு நாம் அடிமைபட்டது அந்நியனுக்கு அடிமை பட்டதற்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, விதி நமது பரம்பரை நோய்- பூர்வீகச் சொத்து, ஆஸ்ரமத்திலே பிறந்தது: அரண்மனையிலும், குடிசையிலும்; சரி சமமாசட் படர்ந்த பழம் பெரும் நோய். ஜொலித்திடும் சாம்ராஜ்யங் கரூம், மணங்கமழும் கலைநயங்களும்,காவியமும் வீரமும்- செல்வமும் மேலோங்கியிருந்த நாட்களிலேயே இந்த நோய் நம்மைப் பிடித்து ஆட்டிப் படைத்தது. ஆனால் புண்ணின் கெட்ட வாடை வெளியே தெரியாதிருக்க; பன்னீர் கொண்டு அதனைக் கழுவி புனுகு பூசி, மறைத்திடுதல் போல. நாம் சாம்ராஜ்யச் சிரப்பு, கலையழகு என்னும் பல்வேறு பூச்சு வேலைகளினால் புண்ணின் கெட்ட வாடை யைக் குறைத்துப் பார்த்தோம் மறைத்துப் பார்த்தோம் போக்கிட முயற்சிகாவில்லை. விதி,காமம்,வினை தலையெழுத்து என்று பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும் இதனை பழம் வியாதி என்று கூறுவது தவறு பண்டைய நாட்களிலே, இருந்து வந்த பெரியவர்கள், தவச் சிரேஷ்டர்கள், வேத விற்பன்னர்கள் விதியை நம்பினர்; விதியின் வலிமையையும், அதனை மாற் றீட மானிடனின் சிறுமதி பயன்படாது என்ற உண்மை யையும் தத்துவமாகவும், உவமானத்துடனும், கதை வடில்.