பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77 னும் நம்பித்தான் தீரவேண்டும். அவைகளுக்குக் கட்டுப் பட்டுத்தான் ஆகவேண்டும் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய கேடு என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். எதிர் பார்ப்பதற்கு நேர்மாறான நிகழ்ச்சிகளைக் காணும்போது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் துவக்கப்பட்ட காரியம், நல்ல முயற்சிக்குப் பிறகும் முறிகிறபோது, போட்ட கணக்குப் பொய்யாகும்போது, விதைத்து முளைக் காதபோது, நண்பர்களிடமிருந்து பகை கிளம்பும்போது, ஓவியம் தீட்டுகையில், வண்ணக் கலயம் உடையும்போது, வீணையை மீட்டும்போது நரம்பு அறுந்து, அறுந்த நாம்பு வேகமாகக் கண்ணில் பாயும்போது, இவைபோன்ற திகைப் பூட்டும் சம்பவங்கள் மனதைக் குழப்பும் நிகழ்ச்சிகள் நேரிடும்போது, மனம் ஓடியுமோ என்று மருளும்போது ஏதேனும் ஓர்வகை ஆறுதல் தேவைப்படுகிறது. அப்போது விதியெனும் தத்துவம் வெற்றிச் சிரிப்புடன் மக்கள் உள் ளத்திலே புகுந்து கொள்ளுகிறது. குடி புகுந்த பிறகு விதிதான் எஜமானன். அந்த எண்ணத்துக்கு இடமளித்த வன், அதற்கு அடிமை. அடிமையை ஆட்டிப் படைக்கிறது விதி. பிறகு தெய்வீக மூலாம் பூசிவிட்டனர் விதியென்ற தத்துவத்திற்கு. ஆகவேதான் அதனை உதறித் தள்ள நெஞ்சு உரம் பலருக்கு வருவதில்லை. மேலுலகத்தில் ஏதோ ஓர் பெரும் ஏடு இருப்பது போலவும், அதிலே பூலோக வாசி ஒவ்வொருவரின் வாழ்க் கைக் குறிப்பும் முன்கூட்டியே எழுதி வைக்கப்பட்டிருப் பது போலவும், அதன்படித்தான் சகல காரியழும் நடை பெறும் என்றும் கூறப்படுகிறது. பழவழிகளில் இந்த நம் பிக்கையைப் பலப்படுத்தினர். எவ்வளவு பெரிய கேடு செய் கிறோம் என்பதை அறிந்தார்களோ இல்லையோ, மனிதன் மனதை முடமாக்குகிறோம்; கருத்தைக் குருடாக்குகிறோம். என்று தெரிந்து செய்திருந்தால், அவர்கள் மாபெரும் துரோகிகள்: தெரியாமல் செய்திருந்தால் ஏமாளிகள். கபட ராயினும், கசடராயினும் அவர்கள் கட்டிவிட்ட கதைகள் இந்த நாட்டு மக்களைத் தலைமுறை தலைமுறையாகக் கெடுத்து விட்டது- தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்