பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

58 மாகக் கெட்டுவிடும் - அண்ணன் அறியாதபடி தம்பி செவ விடும் பத்து ரூபாய் - அண்ணன் தம்பி என்ற பாசத்தால், சில நாட்களுக்குக் குடும்பத்தை எவ்விதத்திலும் பாதிக்கா மலிருக்கும் -- ஆனால் சில காலத்துக்குத்தான் - எப்போது மல்ல தம்பியின் பழக்கமே அண்ணன் அறியாவண்ணம் தன்னலத்துக்காக நடந்து கொள்வது என்றாகிவிட்டால். குடும்பக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, எத்தனை விதமான பந்தம் பாசம் பேசியும், பழைய கதைகளைச் சொல்லியும், இராமனையும் இலட்சுமணனையும் துணைக்கு அழைத்தும் முடியாததாகிவிடும் - குடும்பம், பிளவுறும்: பிரியும்- அண்ணன் தம்பிக்குள்ளாக ஒரு குடும்பத்திலேயே, இந்த நிலை என்றால், ஒரு ஸ்தாபனத்தில் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஸ்தாபத்தில் மற்ற ஐக்கிய உறுப்பினருக்கு மிடையே, கடைசிவரையில் பாசம் ஒன்றை மட்டும் கொண்டு, அன்பு உண்டாக்கி ஸ்தாபனத்தை உடையாத படி பார்த்துக் கொள்ள முடியாது. அமைப்புகளின் ஒற்றுமை, அதனைச் சார்ந்தவர் அனைவரும் ஒரே நோக்கம் கொண்டு.ஒரே வகையான குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாடுபடுபவர் என்பதைத்தான் பொறுத்திருக்கிறது. இந்த ஒற்றுமையும், போலியானதாக இருக்கக் கூடாது. இருப் பின் மிக மிகச் சாதாரணச் சங்கடமும் ஸ்தாபனத்துப் பெரியதோர் இடையூறாகிவிடும். ஸ்தாபனம் ஏற்படச் செய்வதற்குக் கொள்கைகள் தேவை என்பது, கட்டடம் கட்டுவதற்கு அதற்குரிய சாமான்கள் தேவை என்பது போன்றது. கட்டடம் அமைக் கும் கடினமான காரியத்துக்கு, அதற்கான திறமை வாய்ந்த கட்டட வேலைக்காரர் தேவைப்படுவதுபோலச் சில குறிப் பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபனத்தை அமைக்க, திறனும் உறுதியும் கொண்ட அமைப்பாளர் தேவை. அந்த அமைப்பாளருக்குத். தாம் ஒரு