பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99 யாது. அதிலேறிச் செல்லும் இடத்திலே அவர்கள் தரிசிக் கப்போகும் கருணானந்த சுவாமிகளின் கால்பட்ட தண்ணீர் கர்ம நோய்களைப் போக்கும் என்ற கதை பேசத் தெரியும். இது நமது மக்களின் மனவளம். இவர்கள் பெரும்பா லோர். இவர்களைக் கொண்டுள்ள நம் நாடு அழிவுச் சக்தி யில் அணுகுண்டு உற்பத்தியும் ஆக்க வேலைச் சக்தியில் சந்திர மண்டலத்திற்குச் சென்றுவரும் ஆராய்ச்சியும் நடத் திக்கொண்டுவரும் ஓர் பகுதி சரியா? நாட்டில் எதிர்காலத் தில் அக்கரைகொண்ட யாரும். இந்த நிலை சரியேன்று கூற மாட்டாக்கள். சரியல்லதான்; ஆனால் என்ன செய்வது என்று கேட்பர்? வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும் - மக்களின் மனதிலே உலக அறிவு புக வழி செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய, ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்கூட அல்ல - அடிப்படை உண்மைகளையாவது அறி விக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும். வீடுகளிலே நடைபெரும் விசேஷங்களின் போது வெளி யூர்கள் சென்று திரும்பும்போது. பரிசளிப்புகள் நடத்தும் போது புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தை கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சிலகாலதுக்காவது ஏற்ப டுத்திக் கொண்டால் சுலபத்தில் ஒரு சில புத்தகசாலையை அமைத்து விடலாம். புத்தகசாலை அமைக்கும்போது ஏற்கனவே நமது மக் களின் மனதிலே ஊறிப்போயுள்ள அர்த்தமற்ற அவசிய மற்ற கேடே கூடச் செய்யக்கூடிய எண்ணங்களை நிலை நிறுத்தக்கூடிய ஏடுகளைச் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் மனவளம் ஏற்படாது. மனம் சதுப்பு நிலமாகும் பழமைப் புழுக்கள் நெளியுமிடமாகும்.