பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100 புத்தகசாலை அமைப்பது என்று திட்டமிட்டுப் புது வருஷப் பஞ்சாங்கத்தில் ஒரு மூன்று தினுசும், பழைய பஞ் சகங்கக் கட்டு ஒன்றும், பவளக்கொடி மாலையும் பஞ்சாமிர் தச் சிந்தும், பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதையும் பேய் பேசிய புராணமும், நல்ல தங்காள் புலம்பலும் அரிச் சந்திரன் மயாண காண்டமும்,ஆகியவற்றை அடுக்கிவைத் தால், நாம் கோறும் மனவளம் ஏற்படாது. நமது நாட்டை வஞ்சகர்களுக்கு ஏற்ற வேட்டைக்காடு ஆக்கும் தீக்குச்சி சேர்ப்பது போலாகும். உலக அறிவை. உருப்படியான காரியத்துக்குப் பயன் படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து, அதற்குப் புத்தகசாலையென்று பெயரிடுவது, குருடர்களைக் கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழி காட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும். ஒவ்வொர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏர் படுத்திக் கொண்டதும், அமைக்க வேண்டிய புத்தகசாலை யில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும். நூல்கள், இவை முதலிடம் பெறவேண்டும். பொதுவா கவே, மக்களின் அறிவுக்குத் தெளியும். ஆண்மைக்கு உரமும். ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க. வேண்டுமே யொழிய, வாழும் இடத்தை வகையற்றது. என்று கூறி, வான வீதிக்கு வழி காட்டும் நூல்களும் மாயா வாதத்தையும், மன மருட்சியையும் தரும் ஏடுகளும், தன் னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூளும் இருத்தலாகாது.