பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101 பஞ்சாங்கம் அல்ல புத்தக சாலையில் இருக்கவேண்டி யது அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படை பிரச்சிளையிலே நேர்மையான முறை யையும்' செஞ்சு உரத்தையும் காட்டியாக வேண்டும். அப் போதுதான் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழிசெய்யும் - மனவளத்தை உண் டாக்கும் -- நாட்டை வாழ வைக்கும். புலியை அழைத்துப் பூமாலை தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தன வாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது. நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்று அந்த நாட்களில் நமது மார்க்க அறிவு நரயலி யைக் கூடத் தேவை என்று கூறிற்று அந்த நாட்களில். நமது சரித்திர அறிவு பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது நமது பெண் உரிமையைப் யற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடை யில் வைத்துத் தூக்கிச்சேன்ற பத்தினியைப்பற்றி அறிவித் தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது. அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாட்களிலே நாம், வீட்டில் புத்தகசாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள், சரித. ஏடுகள் இருக்கவேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தைம், வாழ்வுக் காண வழிகளையும் காட்ட வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும். நமது தழிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கியச் சாரத்தை சாமான்யரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்கவேண்டும். குறைந்த பட்ச மக்கள் முன்னேற்றத்துக்கும், வாழ்க்கை