பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அம்பிகையின் அருள்

புதுவையிலிருக்கும் தேசமுத்து மாரியம்மனைப் புதுமைக்கவி பாரதியார்,

தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரங் தருவாய்

என்றும்,

துன்பமே யியற்கை யெனும் சொல்லை மறந்திடுவோம்; இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்

என்றும்,

நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம்பெறலாம்

என்றும் பாடியுள்ளார். அம்பிகையை நம்பித் துதித்து, அகங்குளிரப் பாடிக் காதலாகிக் கசிந்து நிற்போமாகில் அவள் அருளைப் பெற்று அவனியில் உய்யலாம் என்பது முன்னோர் கண்ட நன்னெறி என்பது தாமே போதரும்.

திருவேற்காட்டில் அருள்மிகு தேவி கருமாரியம்மன் கொலுவீற்றிருந்து அடியார்களுக்கு அருள் வழங்கு கின்றாள். திருஞானசம்பந்தப் பெருமான் தம்தேவாரத்தில் இத்திருத்தலத்தைப் பல படச் சிறப்பித்துள்ளார்.

'வெள்ளி யான் உறை வேற்காடு' 'வில்லதேம், வேடம் கொண்டவன் வேற்காடு'.