பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 99

"வேத வித்தகன் வேற்காடு!" 'வீழ்சடையினன் வேற்காடு' காலனை, வீட்டி னான் உறை வேற்காடு' “சுடர், வேலி வான் உறை வேற்காடு' 'வில்லி னான் உறை வேற்காடு” 'வீரன் மேவிய வேற்காடு' 'பலி, விரக்கி னான் உறை வேற் காட்டுர்" 'வேற வானுறை வேற்காடு' 'விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு'

என்றும், அருணகிரிநாதரால்,

'வேதாந்த வறாராம நாதந்தா வருள்

பாவு வேலங்கா டுறை சீல பெருமானார்’

என்றும் அருள்மிகு சுவாமிகள் கருமாரி தாசரால்,

"வேற்காட்டுத் திருத்தலத்தைக் கேட்டாலும் பெருவினைகள்

விரைந்தோடும் விதியும் மாறும்

வேற்காட்டுத் திருத்தலத்தைக் கண்ணுற்றால் எழுபிறவித்

துன்பமெல்லாம் விரைந்து வீயும்

வேற்காட்டுத் திருத்தலத்தில் நீரருந்தப் பெரும்பிணிகள்

உடனிங்கிப் புனித மோங்கும்

வேற்காட்டுத் திருத்தலத்தில் திருநீற்றை மெய்யணிந்தால்

பேரின்ப மெய்தலாமே"

என்றும் பாடப்பெற்ற திருத்தலமாகும் திருவேற்காடு.

இத் திருவேற்காட்டில் திருக்கோயில் கொண்டுறையும் கருமாரியம்மையைக் குறவஞ்சியாலும், சதகத்தாலும் ளங்குளிய உவந்து உவந்து பாடுகின்றார் அருட்கவியாய் | மிடையே நடமாடி வந்து பாமழை பொழியும்,