பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 107

மண்ணினுக் கரசே நந்தம் மனைக்குறு செல்வமேயெம் புண்ணியப் பலனே யென்னப் பூங்கொடி யெடுத்த

ணைத்தார்' (விலாதத்துக் காண்டம்; இலாஞ்சனை தரித்தபடலம்: 40)

முகம்மது நபியை அவர்தம் வளர்ப்புத் தாயார் அனைத்துப் புகழும் இப்பாட்டில் சிறிய தொடர்களால் முகம்மதுவின் பெருமைகளைச் சிறப்புற எடுத்துரைக்கும் உமறுப்புலவரின் சொல்லாட்சித்திறனைக் காணமுடிகிறது.

காதற் சுவையைக் கவினுறக் காட்டும் கவிதைகளை யாப்பதிலும் உமறுப்புலவருக்கு இணை அவரே என்று போற்றலாம். முகம்மது நபியார் கண்ட கதிஜா பிராட்டி யாரின் எழிலை வருணிக்கப் போந்த கவிஞர்,

'தேன்கடல் அமிர்தும் திக்கிற் திகழ்வரை யயிர்துஞ் சூழ்ந்து மீன் கடல் நடுவிற் றோன்றும் வெண்மதி யமிர்தும் துய்ய கூன் கட வளையார் வெண்பாற் குரைகட லமிர்தும் சோதி வான்கட லமிர்தும் ஒன்றாய் வடிவெடுத் தனையபாவை'

-விலாதத்துக்காண்டம்; பாதை போந்த படலம் :11)

என்ற பாடலில் அமிர்து எனும் சொல்லே பலமுறை பயின்று வரும்படி பாடி, அமிழ்தெல்லாம் இரண்ட ஒர் அழகிய பாவையாகக் கதிஜாவைக் காட்டியிருக்கிறார்.

கதிஜா பிராட்டியாரின் குலத்தை மரமாகவும், சுற்றத்தை மரக்கிளைகளாகவும், செல்வத்தை அம்மரத் தில் தழைத்துள்ள இலைகளாகவும், கூறியுள்ள ஆசிரியர், கதிஜாபிராட்டியாtiன் செவ்வாயைப் பூவாகவும் கூறி, அப்பூவிற் கனிந்த கனியைக் காட்டிலும் சிறந்த கணியாகக் கதிஜாவை உருவகித்துப் பாடியுள்ள மற்றொரு