பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1U6 சமயந்தொறும் நின்ற தையலாள்

ஏழு உலகங்களுக்கும் கண்மணியாகத் திகழுவது அரபு நன்னாடு; கண்மணிக்குள் உறைகின்ற உயிராகத் திகழ்வது மக்க மாநகர்; அம் மக்க மாநகரின் கடைத் தெருவில் குவிந்துள்ள பொருட்குவைகள் கண்டோரை வியப்புறச் செய்வன. வியப்பின் சுவை தோன்றுமாறு, உமறுப்புலவர் அப் பாடல்களில் சிறந்த சொற்களைக் கையாண்டிருப்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.

'மான்மதக் குவையுஞ் சந்தனத் தொகையும் மணிக்கருங் காழகிற் றணியும் பான்மதிக் குழவிக் குருத்தெனக் கதிர்கள்

பரப்பி மதகளி மருப்பும் தேனமர்ங் தொழுகுங் குங்குமத் தொகையும்

செறிதலால் உயர்ச்சியால் வளத்தால் ஈனமில் இமயப் பொருப்பெனப் பனைத்தங்

கிருந்தது கடைத்தெருத் தலையே' -(விலாதத்துக் காண்டம்; நகரப்படலம் :8)

பொருள்களை அடுக்கிச் சொல்லியுள்ள முறைமையும் அவற்றின் சிறப்பைச் சிறந்த அழகிய அடைச்சொற்களால் விரித்துள்ள பான்மையும் பாடலைப் பயிலுங்கால் மலை யெனக் குவிந்திருக்கும் பொருள்களைக் கண்டதுபோன்ற மலைப்பையும் இப்பாடல் நம்மிடத்தில் ஏற்படுத்து கின்றது.

சிறந்த புலவர்கள் சிறுசிறு தொடர்களாலும் பெருஞ் சுவையைப் பாட்டில் வடித்துத் தந்து விடுகின்றனர். அத்தகு உவகைச் சுவை கொண்ட பாடல் ஒன்று விருமாறு :

'கண்ணின் மணியே எந்தம் கருத்துறும் அறிவே காமர்

விண்ணினிற் குறைபடாமல் விளங்கிய மதியமேயிம்