பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி,பா, 105

"சிற்பத்திறன் உடையவராக இருந்தால் மண்ணோ மரமோ கல்லோ இரும்போ கொண்டு மயிலின் உருவத்தையே அமைத்து அதன் அழகையும் ஆடலையும் படைத் துக்காட்டுவார். நாட்டியத் திறன் வல்லவராக இருந்தால் அந்த மயில் போலவே அசைந்து அசைந்து ஆடிக் காட்டுவார். ஒலிகளின் ஒழுங்கையும் இனிமை யையும் உணர்த்தும் திறன் பெற்ற இசைக்கலைஞராக இருந்தால் மயில் ஆடும்போது அசைந்த அசைவுகளின் அழகுக்கு ஏற்பச் சிலவகை ஒலிகளை எழுப்பி அவற்றில் அந்த அசைவுகளை அமைத்து இசை எழுப்பிக் காட்டுவார். உணர்ச்சிகளுக்குச் சொல் வடிவம் தரும் கவிஞராக இருந்தால் மயிலின் ஆடலும் அழகும் புலனாகும் வகையில் சொற்களையும் அவற்றினுாடே ஒலிநயத்தையும் படைத்துக்காட்டுவார்”. (இலக்கியத் திறன்; பக்கங்கள் 255-256).

இதனால் கவிதைக்கலையில் சொல்லாட்சித் திறனே தைலமை இடம் பெறுகிறது என்பது தெளிவாகிறது.

உமறுப்புலவரின் சொல்லாட்சித்திறன்

உணர்ச்சியின் உந்துதலால் உருவாவதே சிறந்த கவிதையாகும். உள்ளத்தை ஆட்கொள்ளும் உணர்ச்சிகள் பலவகைப்படுகின்றன. வன்மையான உணர்ச்சி வெளிப் பட வேண்டிய இடத்தில் வன்மையான சொற்களும், மென்மையான உணர்ச்சிக்கு உரிய இடத்தில் மென்மை யான சொற்களும், உணர்ச்சி மிக்க இடங்களில் உணர்ச்சி மிக்க சொற்களும், இனிமையும் அழகும் மிக்க இடங்களில் நயமான சொற்களும் அமைத்துக் கவிதை படைப்பது கவிஞனின் திறமையாகும்.