பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11% ச. மயந்தொறும் நின்ற தையலாள்

"கருங்கடல் நீரையுள் ளெழுந்து கார்க்குலம்

பெருந்தரை எங்கணும் பெய்தல் இல்லையால் இருந்தபைங் கூழெலாங் கருகி யெங்கணும் பரந்தது சிறுவிலைப் பஞ்ச மினாதே'

என்ற பாடலில் "சிறுவிலை" என்ற சொல்லாட்சியைக் காண்க. பஞ்சகாலத்தில் பொருள்கள் யாவும் ஆனை விலை, குதிரை விலை விற்பதையே நாம் காண்கிறோம். அதனைக் குறிப்பிடவந்த ஆசிரியர் பெருவிலைப் பஞ்சம்” எ ன க் குறிப்பிடுவதே பொருத்தமாகத் தோன்றும். ஆனாலும் பஞ்சகாலத்தில், பொருளை வாங்க வருவோரிடத்தில் ப ண மு. ம் குறைவாகவே இருக்கும்; அதுபோலவே விற்போரிடத்திலும் பொருள்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். பணமும், பொருளும் அருகிய பஞ்சம் என்பதையே ஆசிரியர் "சிறுவிலைப் பஞ்சம்' என்னும் தொடரில் சுட்டியிருக்கும் நயம் போற்றுதலுக்குரியது.

பஞ்சத்தின் காரணமாகத் தாயும் குழந்தைகளும் பிச்சையெடுக்க வேண்டிய நிலை. குழந்தைகள் உண்டு பல நாட்கள் ஆயினமையால், மிகவும் தளர்ச்சியுற்றிருக் கின்றன. பிச்சையேற்க பிறன்கடை நிற்கும் வேளையிலும் தளர்ச்சியின் காரணமாகத் துரக்கம் உண்டாக, நின்றபடித் துரங்குகின்றன. நெருப்பினுள் துரங்குதல் இயன்றாலும், நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிதல்லவா! ஆகவே நிேன்றபடி துரங்கிய அவ்வேளை யிலும், பசி வயிற்றைக் கிள்ள மீண்டும் கைகளை நீட்டிப் பிச்சைக் கேட்க நேர்ந்த இழிநிலைக்காக இதயம் நோகிறது. பஞ்சத்தால் பரிதவிக்கும் குடும்பத்தின் அவலநிலையைப் படம்பிடிப்பதாய் அமைந்துள்ள அப்