பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குன்றுதோறாடல்

குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய் புன்றலைய பூதம் பொருபடையாய்'-என்றும் இளையாய் அழகியாய் ஏறு ர்ந்தான் ஏறே உளையாயென் னுள்ளத் துறை.

அமிழ்தினுமினிய நம் செந்தமிழ் மொழி முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்ப் பொலிந்து நிற்பதாகும். தொன்மைச் சிறப்புடன் தனிப்போக்கினையும் தகைசால் இலக்கியங் களையும் தன்னகத்தே கொண்டிலங்குவது குன்றாத வாழ்வுடைய நம் தமிழ் மொழியேயாகும். அளவிலும் கவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல்கள் போல் பிற இலக்கியங்களில் இல்லை என்பது அறிஞர் கூற்றாகும்.

சங்க இலக்கியங்களால், பழந் தமிழர் இயற்கையோ டியைந்த இன்ப, அன்பு வாழ்வு வாழ்ந்து வந்ததை அறிய முடிகின்றது. இவை இயற்கையின் பின்னணியில் மக்கள் வாழ்க்கையினைக் கிளத்திக் கூறுகின்றன. தொல் காப்பியனார் கூறும் முதற்பொருளும் கருப்பொருளும் இயற்கையின இனிய பெற்றியினை எடுத்தியம்ப, அவர் கூறும் உரிப்பொருள் மக்கள் வாழ்வினை வகையுறப் புனைந்து நிற்கின்றது. எனவே இயற்கையில் இலங்கும் அழகினைப் போற்றி மகிழ்ந்தனர் பழந்தமிழா எனலாம். இயற்கையை இனிது போற்றியதோடு, இயற்கையில் இறைவன் கொலு வீற்றிருப்பதாக எண்ணி, அவ் வெண்ணத்தின் அடிப்படையில் இறைவனை வழிபடவும்