பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 54.Larr. 13

செய்தனர் நம்மவர்கள். அவ்விறைவனை முருகன் என்றனர். அழகு உறையும் குன்றுகளிளெல்லாம் கோலக்குமரன் கொலுவீற்றிருப்பதாகக் .ெ கா ண் டு , ஆங்காங்கு அவனை விழாவெடுத்து வழிபட்டனர்.

அழகுக் கடவுளாக உறையும் முருகனைத் தமிழ்க் கடவுளாகவும் கொண்டனர் நந்தமிழர், முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன் முருகன்’ என்பது அருணகிரிநாதர் அருள்மொழி.

அறுபடைவீடுகள்

ஆறு படை வீடுகள் முருகனுக்குரியனவாகத் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. முதலாவதாகக் கூறப்படும் படைவீடு திருப்பரங்குன்றமாகும். சூரனை வென்று தேவருலகினைக் காத்த முருகனுக்கு இந்திரன் தான் வளர்த்த தேவசேனை என்னும் நங்கைநல்லாளைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்வித்துக் கொடுத்த தாகக் கந்தபுராணம் கூறும். பழந் தமிழ் நூல்களான பரிபாடல், கலித்தொகை, அகநானுாறு, மதுரைக்காஞ்சி முதலான நூல்களும் திருப்பரங்குன்றத்தினை முருகவேள் உறையும் தலமாகக் குறிப்பிடுகின்றன.

இரண்டாவது படைவீடான திருச்சீரலைவாய் எனப் படும் திருச்செந்துார் மிகப் பழமையான தலமாகும். பாண்டியன் இலவந்திகைத்துஞ்சிய நன்மாறனை வாழ்த்த விரும்பிய மருதவிளநாகனார் என்னும் புறநானூற்றுப் புலவர் திருச்செந்துாரில் கடலின் அலைகளால் மோதப் படுவதும் மு. ரு க ேவ ள் எழுந்தருளியிருப்பதுமாகிய திருக்கோயிலின் முன்னுள்ள கடற்துறையில் கடுங் காற்றால் திரட்டித் தொகுக்கப்பெற்ற மணலை விடப் பல்லாண்டு காலம் நீ வாழ்வாயாக என்று வாழ்த்தியருளி