பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சமயந்தொறும் நின்ற தையலாள்

துலங்கும் இடம் மலையிடங்களே. தமிழ்நாட்டின் மலை களிலெல்லாம்-குன்றுகளிலெல்லாம் .ெ கா லு வீ ற் றிருக் கின்றான் வேலாயுதம் த ரி த் த கோலாகலனாம் குன்றெறிந்த குமரப்பெருமான்.

ஐந்தாவது படைவீடாகத் திருத்தணி என்பதையும் குறிக்கும் வழக்கம் உண்டு. செரு தனி-என்பது திருத் தணியாயிற்றென்பர். குன்றவரை வென்று குறமகளாம் வள்ளியொடும் வாழும் மலை என்னும் பொருளில் வழங்கு கின்றது என்பர். செரு என்பது கோபத்தையும், தணி என்பது தணிந்து தன்னிலையடைந்ததையும் குறிக்கும். எனினும் எல்லாத் திருமலைகளையும்-முருகன் கோயில் களையும் ஐந்தாம் படை வீடாகக் கொள்ளலாம். அருணகிரியாரும் வடிவ தாமலை யாவையுமேனிய தம்பிரானே’, என்றும், பலகுன்றிலுமமர்ந்த பெருமாளே என்றும், குன்றுதோறாடல் மேவு பெருமாளே' என்றும் தம் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளமை இங்கு நோக்கத் தக்கது.

ஆறாவது படை வீடு பழமுதிர் சோலையாகும். இவ்வாறு படை வீடுகளையும் திருமுருகாற்றுப்படை கூறிய வரிசை முறையிலேயே கந்தபுராணக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களும், கந்தரந்தாதியின் முதற் செய்யுளும் குறிப் பிடுகின்றன.

முருக வழிபாடு ஆரவாரத்தோடு நிகழும். குழல் அகவும்: யாழ் முரலும்; முழவு அதிரும்; முரசு இயம்பும் என்று பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ண னார் குறிப்பிட்டுள்ளார். இம்முறையில் பழந்தமிழர் பண்பாட்டோடு-நம்பிக்கையோடு முருகனுக்கு விழா வெடுத்தனர்.