பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

go.orr 17

தேவேந்திரன் தரத் தேவசேனையைக் கற்பு மணம் புரிந்த முருகன் தினைப்புனமாது வள்ளியையும் தாமே விரும்பிக் களவு மனங்கொண்டு கற்பில் தலைப் படுகின்றார். 'யான் எனது அற்ற அடியவரிடம் இறைவன் தானே வந்து நல்குவான்' என்ற உயரிய தத்துவத்தை வள்ளித் திருமணம் விளக்குகின்றது என்பர் பெரியோர். எனவே தேவசேனையைக் கிரியா சக்தி என்றும், வள்ளியை இச்சா சக்தி' என்றும், வேலினை ஞான சக்தி' என்றும் கூறுவர். இது போன்றே மயிலினை ஆணவம் என்றும், கோழியினைச் சிவஞானம் என்றும், மயிலாகிய ஆணவத்தினை அடக்கித் தான் அமரும் வாகனமாக்கிக் கோழியாகிய சிவஞானத்தைக் கொடியாக உயர்த்தித் தன் கையில் பிடித்துள்ளார் முருகப்பெருமான் என்பர் அறிஞர். முருகனுக்குச் சிறந்த படையாக விளங்குவது வேலாயுத மாகும். எனவே பெரியார் விழிக்குத் துணையாக முருகனின் மலர்ப்பாதங்களையும், மொழிக்குத் துணையாக 'முருகா என்னும் திருப்பெயரினையும், பழிக்குத் துணையாக அவன் தன் பன்னிரு தோளினையும், வழிக்குத் துணையாக வேலினையும் மயிலினையும் முறையே கொள்வர். அருணகிரியார் பாடும் அவ்வழகிய பாடல் வருமாறு:

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்

பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணைமுரு காவெனும்

நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவர் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங்

கோடன் மயூரமுமே.

-கந்தரலங்காரம்-70