பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சமயந்தொறும் நின்ற தையலாள்

மேலும் காதிர்காமத் திருப்புகழில் அருணகிரியார் 'இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக்கிரங்கும் பெருமாளே என்று ஏழைக்கிரங்கும் ஏந்தலின் இதயத் தினைப் புகழ்ந்துரைத்துள்ளார்.

ஊமையாகப் பிறந்து செந்தில் முருகன் அருளால் பேசும் திறம் பெற்ற குமரகுருபரர், முருகன் வள்ளியின் தேனுாறு கிளவிக்கு வாயூறி நின்றதைக் குறிப்பிட்டு,

வழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள்

வேண்டிய வரங்கொடுப்பான் மெய்கண்ட தெய்வமித் தெய்வமல் லாற்புவியில்

வேறில்லை

என்று முருகனே முழுமுதற்பொருள் என்று மனமாரப் பாராட்டி வணங்குகின்றார்.

முருகனுக்குரிய வி ர த ங் க ள் வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சஷ்டி முதலியனவாகும். கச்சியப்பர், அருணகிரியார், குமரகுருபரர், முதலிய புலவர் பெரு மக்களை ஆட்கொண்ட அண்ணல் அவர். குமாராய நம", "சரவணபவ” என்ற ஆறெழுத்து-சடாட்சரம் முருகப் பெருமானுக்குரிய மந்திரமாகும். எனவே தமிழ்த்தெய்வ மாம் முருகன் திருப்பெயரினை உள்ளம் உருகி ஒதுவோரை நாளும் கோளும் ஒன்றும் செய்யா. அஞ்சுமுகந் தோன்றினால் முருகனின் ஆறுமுகந்தோன்றும். நெஞ்சில் ஒருமுறை எண்ணினால் இருமுறை தோன்றி அஞ்சாதே" என்று கூறி, தெய்வ இளநலம் காட்டி அடியவர்க்கு அருள் பொழிவான் திருமுருகன் என்பது திண்ணம். --