பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6). Lirr. 19

ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்.

-கந்தபுராணம்

நாளென் செயும்வினை தானென் செயும்.எனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுங் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.