பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ø. turr. ---. 2島。

இட்டுக்கொன்று பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் இ வ் வூ ரி ல் செங்கோலோச்சியதை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த இவ்வூரில்தான் நபிநந்தி யடிகள் நாயனார் பூசை செய்து வழிபட்டார்; மேலை ஞானப்பிரகாசர் இங்கே வழிபாடு செய்தார்; விறன்மீண்ட நாயனார் இத்தலத்தில் நெடுங்காலம் தங்கியிருந்தார். சுந்தரமுர்த்தி நாயனார் இவ்வூருக்கு வந்து பரவை நாச்சியாரை மணந்துகொண்டு வாழ்ந்தார்; இவ்வூரிலே தான் திருத்தொண்டத் தொகையைப் பாடினார். சுந்தரர் பரவையார் இருவரும் எழுந்தருளியுள்ள பரவை நாச்சியார் கோயில் இவ்வூரில் உள்ளது. சங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்பெறும் முத்துசாமி தீட்சிதர், தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் இவ்வூரில் தோன்றியவர்கள்.

இத் தலத்தைப் பற்றிக் கூறும் இலக்கியங்கள் பல எழுந்துள்ளன. கமலாலய சிறப்பு, திருவாரூர்ப் புராணம், தேரூர்ந்த சோழபுராணம், தியாகராச லீலை, திருவாரூர் நான்மணிமாலை, தியாகராசர் பள்ளு, குறவஞ்சி, திருவாரூர்ப் பன்மணிமாலை, கமலாம்பிகை பிள்ளைத் தமிழ், திருவாரூர்மாலை, கமலாம்பிகை மாலை, திருவாரூர் ஒருதுறைக்கோவை, தியாகராசர் கழிநெடில், திருவாரூர் உலா, திருவாரூர்ககோவை என்னும் நூல்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும். இத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த ஊரில் பிறப்பது முத்தி அளிக்கும் என்னும் மரபு ஏற்புடைத்தே.