பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சமயந்தொறும் நின்ற தையலாள்

சிதம்பரம் - கோயில் என்றாலே சிதம்பரத்தைக் குறிப்பதாக உரைப்பர். வேடன் பிள்ளையார் கோயில், செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில், சேக்கிழார் கோயில், கமலிசுரன் கோயில், தேரடிப் பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், வீரபத்திரசாமி கோயில், செல்லியம்மன் கோயில், நந்தனார் கோயில், கூத்தாடும் பிள்ளையார் கோயில், இளமையாக்கினார் கோயில், அனந்தீசுவரர் கோயில், தில்லைக் காளியம்மன் கோயில், நரமுகப் பிள்ளையார் கோயில், மத்தியந்தவேசுவரர் கோயில் என்னும் கோயில்கள் இவ்வூரின் கண் அமைந் துள்ளன. இவ்வாறு கோயில்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். சிற்றம்பலம், புலியூர், தில்லை, சித்திர கூடம் என்பன இவ்வூருக்கு வழங்கப் பெறும் வேறு பெயர்கள். ஐம்பூதத் தலங்களும் இஃது ஆகாயத்தலம். இங்குள்ள இலிங்கம் ஆகாயலிங்கம்’ எனக் குறிக்கப் பெறுகின்றது. தேவார மும்மூர்த்திகளின் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. சேக்கிழார் பெருமான் தம்முடைய திருத்தொண்டர் புராணத்தை இத்தில்லையம்பலத்தேதான் அரங்கேற்றம் செய்தார். பொன்னம்பலத்தே நடராசப் பெருமான் திருவடி துரக்கி ஆடுகின்ற நடனக்காட்சி கண்ணாரக் கண்டுகளிக்கத் தக்கது. அந்நடனத்தை நாதாந்த நடனம் எனக் குறிப்பர். - -

சம்பந்தர், அப்பர், சுந்தரர், கல்லாடர், திருமாளிகைதி தேவர், சேந்தனார், கண்டராதித்தர், கருவூர்த் தேவர், பூந்துருந்தி நம்பிகாடநம்பி, பட்டினத்தார், அருணகிரி யார், சேரமான் பெருமாள் உமாபதிசிவம் முதலிய பலர் சிதம்பரத்தைப் பாடியுள்ளனர். இவ்வூரில் 63 நாயன்மார்