பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. - 2ኝ

களின் சிலைகளும் வழிபாட்டுக்குரிய வகையில் கோயிலின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளன. -

இத்தகு சிறப்புகள் நிறைந்த இவ்வூரில் மாணிக்க வாசகர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கூற்றுவ நாயனார் கோச்செங்கட்சோழ நாயனார், கணம்புல்ல நாயனார், மறைஞான சம்பந்த சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர் முதலிய பெருமக்கள் முத்தியடைந்தனர். இதன் காரணமாகவும் இத்தலத்தின் மாட்சிமை புல னாகும்.

சிதம்பரத்தின் பெருமைகளைப் பெரியபுராணம், கோயிற்புராணம், சிதம்பர புராணம், புலியூர்ப் புராணம், தில்லைக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட்கோவை, சிதம்பரநாதர் பதிகம், புலியூர் வெண்பா, சோழமண்டல சதகம், கந்தபுராணம் போன்ற நூல்கள் விதந்தோதி யுள்ளன. கண்ணுதற் கடவுளின் தன்னருள் வேண்டுவோர் இத்தலம் நாடி வந்து ஆடுகின்ற அவ் அண்ணலைத் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுகின்றனர்.

திருவண்ணாமலை

ஐம்பூதத் தலங்களுள் அக்கினித் தலமாகக் கருதப் பெறுவது திருவண்ணாமலை என்னும் திருப்பதி. இங்குள்ள மலை இறைவன் உருவமாக-சோதி வடிவமாகப் புகழ்ப் பெறுகின்றது. இம்மலையை வலம்வர வேண்டுமெனில் 8: மைல் துாரம் நடக்க வேண்டும். அந்த அளவிற்கு பெரிய மலையாக இஃது உள்ளது. இத்தலத்தை நினைத்தாலே முத்திகிட்டும் என்னும் நம்பிக்கை காலங்காலமாகத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளது.