பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயந்தொறும் நின்ற தையலாள்

இயற்கையழகும், சீரான தட்பவெட்ப நிலையும் இவ்வூால் இயல்பாக அமைந்திருத்தல் காணலாம். இங்கே யுள்ள கோயில் அண்ணாமலையார் கோயில் என வழங்கப் பெறுகின்றது இங்குள்ள அம்மன் உண்ணாமுலையம்மை என்னும் பெயரினள். அப்தகுசாம்பாள் எனவும் அம்மனைக் குறிப்பர். நான்கு பெரிய மதில் வாய்களிலும் உயரிய கோபுரங்கள், கோயிலின் உள்ளே ஐந்து நடுந்தரக் கோபுரங்கள் பெற்று அமைதியான அழகுடன் இக்கோயில் திகழ்கின்றது. இவ்வூரில் பல குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம் ஆகியன அமைந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

தேவார மூர்த்திகளின் பாடல் பெற்ற தலமாகவும், திருப்புகழ் பாடல்பெற்ற தலமகவும் விளங்குதல் இவ்வூரின் சிறப்புகளுள் குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபவிழா தலைசிறந்த விழா வாகும். இவ்விழா அடிமுடி தேடிய ஐதிகத்தைப் பின்பற்றியது. அரியும் அயனும் தம்மில் யார் உயர்ந்த வர்கள் எனப் போட்டி கொண்டனர். இறைவன் அவர் களுக்குத் தம் உண்மையான ஆற்றலை உணர்த்த திருவிளையாடல் ஒன்றை மேற்கொண்டார். அதன்படி தம்மைச் சோதிமலையாக நிறுத்திக்கொண்டார். அரியும் அயனும் முறையே வராக அவதாரமும் அன்னப்பறவை அவதாரமும் எடுத்து இறைவனின் அடிமுடியை த் தேடினர். இறைவனின் கிருவிளையாடலை உணராத அவ்விருவரும் பெருமுயற்சி மேற்கொண்டு இறுதியில் அடிமுடி காணாது அமர்ந்தன . அந்தக் கதையை நினைவூட்டுவது போன்று இம்மலையில் கார்த்திகைத் திருவிழா நடைபெற்று வருகினறது.