பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 27

காசி

கங்கையைச் சார்ந்த திருப்பதிகளில் காசியே முதன்மை பெற்றது; பாரத நாட்டின் கணக்கற்ற திருப்பதி களிலும் தலைசிறந்தது. இதற்கு அவிமுக்த கூேத்திரம், ஆனந்தவனம், பெருமயானம் என்று பெயர். இங்கே வந்து வசித்தாலே நற்கதி அடையலாம்; இங்கு உடலை நீத்தலே முத்திக்கு வழியாகும். சிவபிரான் இங்கே தெருத் தெருவாக அலைந்து கொண்டு மடியும் மக்கள் காதில் தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருக்கிறார்

ώ.Τζ.ΜΤΙ ΜΙΤ,

காசி இந்து சமயங்களின் வளர்ச்சிக்கு நிலைக்களனான இடமாகும். வியாசமுனிவர், மகாவீரர், புத்தர், சங்கரர், துளசிதாசர் முதலிய சமய ஆசாரியர்கள் இப்புண்ணியத் தலத்தில் வாழ்ந்தனர். இங்கே நூற்றுக்கணக்கான கோயில் கள் உள்ளன. அவற்றுள் விசுவநாதர், அன்னபூாணி, விசாலாட்சி, துர்க்கை, பிந்துமாதவர், கேதாரேசுவரர் கோயில்கள் முக்கியமானவை.

தென்னாட்டு மக்கள் காசிக்கும், வடநாட்டு மக்கள் இராமேசுவரத்திற்கும் சென்று வருதல் இன்றும் நாம் காணக்கூடிய நிகழ்ச்சியாகும். காசியிலிருந்து கொண்டு வந்த கங்கை நீரைக் கொண்டு இராமேசுவரக் கோயிலில் அபிசேகம் செய்தலை யாவரும் அறிவர். அவ்வகையில் இத்தலங்கள் இந்திய நா ட் டி ன் ஒற்றுமைக்கும். ஒருமைப்பாட்டிற்கும்-வடக்கிலிருந்து .ெ த ற் கு வ ைர யாவரும் உடன்பிறந்தவர்களே என்னும் கருத்து வலுப்பெறுதற்கும் மிக அடிப்படையான தொண்டினை ஆற்றிவருதல் கண்கூடு. ஆகவே, காசி முத்தியளிக்கும் தலமாக இருப்பதுடன் ஒருமையுணர்வை ஊட்டும் தலமாக இருப்பதையும் உணரலாம்,