பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o() சமயந்தொறும் நின்ற தையலாள்

"புராணம் என்னும் வடசொல்லிற்குப் பழமை என்று பொருள் கூறுவர். பழைய கதைகளின் தொகுப்புக்குப் புராணம் என்று பெயர் கூறுவர். தொல்காப்பியரும் பழமை என்ற பொருளுடைய தொன்மை' என்னும் பெயரால் பாடப்படும் பாட்டு வகைக்குத் தொன்மை என்றே பெயர் கூறுவர்.

'தொன்மை தானே

உரையொடு புணர்ந்த பழமை மேற்றே...'

என்பது அந்நூற்பாவாகும். பழமையான பொருள் பற்றிப் பாடப்படுவது தொன்மை என்னும் பெயரால் தமிழில் வழங்கப்படுவதுபோல பழமையான கதைகளைப் பற்றி எழுதிய வடமொழி இலக்கியத்தை வடமொழியார் புராணம் என்பர். வடமொழிப் புராணக் கதைகள் எல்லாம் சமய உண்மைகளை விளக்குவதற்காக எழுதப் பட்டுள்ளன. புராணக் கதைகளையெல்லாம் உலக நடைமுறைக்குப் பொருந்த நடந்ததாகக் கருதப்படுமா என்று நாம் ஆராய வேண்டுவதில்லை. சில கதை நடந்த தாக இருக்கலாம். சில கற்பனையாகவுமிருக்கலாம். ஆனால், சமய உலகத்தில் எந்த உண்மையைக் கூறுவதற்கு இப்புராணக் கதை எழுதப்பட்டுள்ளது என்று ஆராய்ந் துணருவதே ஆராய்ச்சி செய்பவரின் கடமையாகும்.

மூவர் திருமுறையுள் முதல் ஐந்து பதிகங்கள்

திருஞானசம்பந்தர் தேவாரத்துள் முதல் ஐந்து பதிகங்கள் திருப்பிரமபுரம். திருப்புகலூர், திருவலிதாயம் திருப்புகலியும் திருவிழிமிழலையும், கீழைத் திருக்காட்டுப் பள்ளி என்னும் இத்தலங்கள் பற்றியனவாகும். திருநாவுக் கரசர் தேவாரத்துள் முதல் ஐந்து பதிகங்கள், திருவதிகை வீரட்டானம், திருவதிகை வீரட்டான ம், திருவையாறு, தி ரு வா ரூ ர், திருவாரூர் பழ மொ ழி என்னும்