பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 3 I

இத்தலங்கள் பற்றியனவாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்துள் முதல் ஐந்து பதிகங்கள் திருவெண்ணெய் நல்இாா திருப்பரங்குன்றம், திருநெல்வாயில் அரத்துறை, திருவஞ்சைக்களம். திருவோண காந்தன் தளி என்னும் இத்தலங்கள் பற்றியனவாகும். இவர்கள் பாட்டில் முதலாக உள்ள தோடுடைய செவியன் என்பதும் கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்பதும், பித்தா என்பதும் முதல் தொடக்க மாய் அமைந்த பாடல்கள். இவர்தம் திருமுறைக்கு முதலாய் அமைந்த இப்பாடல்கள் இவர் தம் வாழ்க்கை வரலாற்று முதல் நிகழ்ச்சியிற் பாடப்பட்டதாய் அமைந்து உள்ளன. அப்பாடல்கள் வருமாறு.

"தோடுடையசெவி யன்விடை யேறியோர்

து வெண் மதிசூடிக் காடுடைய சுட லைப்பொடி பூசியென்

உள்ளங் கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந்

தேத்த வருள்செய்த பீடுடையபிர மாபுர மேவிய

பெம்மா னிவனன்றே"

-திருஞானசம்பந்தர் (1-1) 'கூற்றாயின வாறு விலக்ககிலிர்

கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேயிர வும்பகலும்

பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றாதென் வயிற்றி னகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேனதி கைக்கெடில

வீரட்டா னத்துறை யம்மானே'

திருநாவுக்கரசர் (4-1)