பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 3.3

மூன்று காலத்திற்குரியதாய்க் கொள்ளவேண்டும். "தன்னை உண்மை அன்பால் வணங்குகின்ற அன்பரின் உள்ளம் உலகப் பொருள்களைக் கருதி ஓடாதவாறு, தன்னிடத்திலேயே அமைந் தொழுகுமாறு அவர் தம் உள்ளத்தை இறைவன் கவர்ந்து கொள்ளு கின்றான்' என்ற 6yᏪᏌFóᏗ சமயத் தொல்கருத்து திருஞானசம்பந்தப் பெருமானின் முதற்பாட்டிலேயே அமைந்திருப்பதை ஊன்றி ஊன்றி நோக்கி இப்பாட்டை நாவாரப் பாட வேண்டும்.

மேலும் அவர் 'என் பாட்டைக் கேட்பதற்குத் திருவருட்சக்தியின் கூறாகிய தோடுடைய செவி தயாராக உள்ளது. என்னை நோக்கி வருவதற்கு அறத்தின் வடிவாகிய விடை தக்க தாய் அமைந்துள்ளது. அவ்விடை யில் ஏறி வெண்டிங்களைச் சூடி வெண்பொடியை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு வருகின்ற காட்சி என் உள்ளத்தையே கவர்கின்றது. வெண்மதி தானும் தக்கன் இட்ட சாபத்தினால் ஒளிகுறைந்து நின்று, இறைவனைப் பூசித்து அவ்வொளி வளரப் பெறுவதற்காக முடியில் சூடிக் கொள்ளப்பட்டதல்லவா! பொடி தானும் மகாசங்கார காலத்திலே இறைவன் தீவிழியால் எல்லாப் பொருளையும் சுட்டெரிக்கத் தோன்றிய பொடியல்லவா! இவ்விரண்டும் அவனுடைய பெருமையை உணர்த்துகிறது. தோடுடைய செவியனாப் விடையேறி என் முன் வந்து தோன்றியது அவனுடைய எளிமையை உணர்த்துகின்றது. இவற்றால் என் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டான் என்று திருஞான சம்பந்தர் இறைவன் இறைவியுடன் தன் முன் தோன்றி, ஞானப்பால் தர, அதனை உண்டு உவந் அறிவுத் தெளிவால் பாடியுள்ளார். இ. பாட்டு எண்வகை .ெ பப்ப் பாட்டில் புலன் காரணமாகத் தோன்றிய உவப்பு என்னும் மெய்ப் பாட்டிற்குரியது.