பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சமயந்தொறும் நின்ற தையலாள்

அடுத்து திருநாவுக்கரசர் பாடிய முதற்பாட்டைப் பார்ப்போம். திருநாவுக்கரசர் முன்னே சமண சமயத்திற் சேர்ந்து தருமசேனர் என்னும் பெயருடன் அங்கே உள்ளதை அறிந்த தமக்கைத் திலகவதியார் இறைவனிடம் வேண்டிக்கொள்ள இறைவன் சூலை நோயை ஏவி அதனால் அவரைத் துன்புறுத்த வேண்ட, திலகவதியார் அ றி வு று த் தி ய ப டி யே திருவதிகைத் திருவீரட் டானேசுரரைத் தொழுது கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்று பாடத் தொடங்கினார். இப்பாட்டால் திருநாவுக்கரசர் பெரிதும் சூலை என்னும் பிணியால் தாம் அடைந்துள்ள துன்பநிலையினைக் கூறி அதனைத் தீர்த்தருள வேண்டுமென்றும் தீர்த்தருளினால் உன் திருவடியை இரவும் பகலும் பிரியாது வணங்குவன் என்றும் கூறுகின்ற பொருளே உள்ளன. இப்பாட்டு பிணியால் வந்த இளிவரல் என்னும் மெய்ப்பாட்டிற் குரியது.

திருஞானசம்பந்தர் பாட்டை முதலில் வைத்ததேன்?

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத் தில் வாழ்ந்திருந்தனர். சம்பந்தரைவிட அரசர் சிறிது காலத்தால் முற்படப் பிறந்தவராகவும் இருக்கலாம். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் என்று அழைக்கத் தக்க சிறப்பும், ஆண்டின் முதிர்ச்சியும் உடையவர். திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பிகள் திருநாவுக்கரசர் பாட்டை முதலில் வைக்காமல் திருஞான சம்பந்தர் பாட்டை முதலில் வைத்தது ஏன் என்று வினா எழுகின்றது. அதற்கு விடையாக ஆராயாதார் நம்பியும் அந்தணர் சம்பந்தரும் அந்தணர் அதனால் சம்பந்தர் பாட்டை முன்வைத்துவிட்டார் என்று கூறிவிடுகின்றனர். ஆராய்ந்தவர் ஞானசம்பந்தர் முருகன் அவதாரம்: மேலும்