பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சமயந்தொறும் நின்ற தையலாள்

பட்டது. பித்தனே! பிறைசூடியவனே! பெருமானே! அருளை ஆள்பவனே! என்ன காரணத்தாலே உன்னை நான் மறவாது நினைக்கின்றேன்? நான், உலகப் பொருள்களையெல்லாம்விட்டு உன்னையே நினைக்குமாறு (நினைப்பதற்குக் காரணம் ஆமாறு) என் மனத்திலே உன்னையே வைத்தாய். திருநல்லூர் திருவருட்டுறையுள் எழுந்தருளியிருக்கும் அத்தனே! என்று நீ, அன்று நான் உன்னடிமை என்னும் முறை அமைத்திருக்கவும் நான் மறந்திருந்தாலும் நீ என் அடிமைதான் என்று வழக்குத் தொடுத்ததற்கு (இனியும்) மேலும் உனக்கு ஆளல்லேன் என்று கூறமுடியுமா? முடியாதே என்னும் பாட்டும்புணர்வு பற்றித் தோன்றிய (ஆண்டவனுக்கு அடியவனாய்க் கூடப் பெற்றதைப் பற்றிய) உவகை என்னும் மெய்ப் பாட்டினை உட்ை யது.

முறையே இம்மூவரின் முதற்பாட்டுக்கள் இறைவன் என் உள்ளங்கவர் கள்வனாயுள்ளான். இறைவனே! கூற்றுவன் போன்ற பிணி முதலாயினவற்றை விலக்கியருளுக. இறைவனே! உன்னையே நினைக்குமாறு உன்னை என் மனத்தில் வைத்துள்ளாய், உனக்கு ஆளாய் அல்லேன் எனல் ஆமே? என் கின்ற பொருளை உணர்த்துவனவாய் மூவர் திருமுறையில் முன்னே நிற்கின்றன.

வைணவ சமயத்தவர் நாராயணனே மேலான கடவுள் என்பதற்குக் கதைபல கூறி வருகின்றனர். நாராயணன் தன் திருநாபிக் கமலத்தில் பிரம தேவனை உண்டாக்கி அவனைக்கொண்டு உலகத்தைப் படைப்பித்தும் அரனை உண்டாக்கி உலகை அழிக்குமாறு செய்வித்தும் தான் உலகத்தைக் காக்கும் தொழிலை மேற்கொண்டு காத்தும் எல்லோர்க்கும் மேலான கடவுளாக விளங்குகின்றான் என்பர். அதுவுமன்றி மற்றொரு படைப்பில் நாராயணன்