பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- *

G. art. 37

ஐந்து முகம் உடையவனாகப் பிரமனைப் படைத்தான். பிரமனும் தன் முகம்போல் சங்கரனைப் படைத்தான் என்றும் கூறுவர்.

சைவரும் சைவ சமயத்தை உயர்த்துவதற்காக சிவபெருமான் திருமால் நான்முகனைப் படைத்து காத்தல் படைத்தல் முதலிய தொழில்களைப் புரியுமாறு செய்து தான் அழித்தற்றொழிலோடு எல்லாத் தொழிலையும் புரியவல்லவனாகவும் உள்ளான் என்றும், திருமாலும் நான்முகனும் பல தலங்களில் சிவபெருமானைப் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர் என்றும், பிரமன் படைத்தற்றொழில் செய்வதால்தானே தலைவனென்று செருக்கியிருத்தலைத் தெரிந்து சிவபெருமான் அவனது ஐந்து தலையிலொன்றை கிள்ளிப் போக்கிப் படைக்கவல்லையேல் இழந்த தலையி லொன்றைப் படைத்துக்கொள் என அது மாட்டாது செருக்கொழிந்தானென்றும், திருப்பாற்கடல் கடைந்த காலத்திலே மத்தாகப் பயன்படுத்திய பெருமலை சாய்ந்து கடைய முடியாமற்போகத் திருமால் ஆமை வடிவமெடுத்து முதுகில் அம்மலை பிறழாமலிருக்கும்படிச் சுமந்து உதவிப் பின்னர் செருக்குக்கொண்டு உலகத்திற்கு இடர் செய்யப்புக அதனை உணர்ந்த சிவபெருமான் அந்த ஆமையைக் கொன்று அதன் ஒட்டினைக் கண்டோர் செருக் கொழியுமாறு அணிகலனாகப் பூண்டுகொண்டான் என்றும், இதுபோல் திருமால் எடுத்த வராகம் மச்சம் நரசிங்கம் என்னும் அவதாரங்களை எல்லாம் அழித்து வராகத்தின் எயிற்றினையும் மச்சத்தின் விழியினையும் நரசிங்கத்தின் வண்ணத்தோலினையும் அணிந்து கொண்டான் என்றும் சர்வ சம்கார காலத்திலே எல்லாப் பொருள்களையும் நுதல் விழித்தியால் சுட்டெரித்து அங்கு தோன்றிய வெண்பொடியை திருமேனியிற் பூசிக்கொண்டு

ச.-3