பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சமயந்தொறும் நின்ற தையலாள்

நடனம் செய்வான் என்றும் புராணக் கதைகள் கூறு கின்றன.

யாகம் முதலிய வினையே செய்யத்தக்கது. அவ்வினையே சுவர்க்கம் முதலிய பயனைத் தரும். இவ்வினைக்கு மேல் கடவுள் என்கின்ற ஒரு பொருளில்லை என்னும் கொள்கையை உடைய தாருகா வனத்து இருடி களின் போக்கை மாற்றுவதற்காக திருமாலை மோகனப் பெண் வடிவில் முனிவர்களிடம் போகும்படி செய்துவிட்டுச் சிவபெருமான் அழகிய பிட்சாடன. வடிவத்துடன் அம்முனிவரின் மங்கையர் இருக்குமிடத்திற்குச் செல்ல இதனால் முனிவர் மங்கையர் என்னும் இருவர்தம் ஒழுக்க நிலை கெட்டுப் போக இவற்றிற்குக் காரணம் சிவபெருமான் தான் என்பதை உணர்ந்த முனிவர்கள் அபிசார ஓமம் செய்ய அதிற்றோன்றிய முயல், புலி, மான், பாம்பு முதலானவற்றையெல்லாம் சிவபெருமானைக் கொல்லுமாறு ஏவ, சிவபெருமான் முயலகனைக் காலின் கீழே மிதித்துக் கொண்டும், புலியை உரித்துத் தோலை உடையாக உடுத்திக்கொண்டும், மானைக் கையிலே பிடித்துக் கொண்டும், பாம்பினை பலவகை அணிகளாக அணிந்து கொண்டும் ஊறுபாடில்லாமல் காட்சியளித்தார் என்று புராண கதை கூறும். இக்கதைகளையும் இதுபோன்ற கதைகளையும் வைத்துக்கொண்டு தேவாரப் பதிகங்களை படிக்க வேண்டும்.