பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சுந்தரரின் திருத்தலப் பயணம்

தோற்றுவாய்

"கொத்தார் மலர்க்குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் மெய்த்தாயினும் இனியான்' ஆணைக்கிணங்கி, வியன் நாவலர் பெருமானாய சுந்தரர், இறையான் மகிழிசை பாடுகின்றார். பாட எல்லை நிகரில்லாதவனாய இவ பெருமான் சொல்லார் தமிழிசை பாடிய தொண்டனை' இன்னும் பல வகைகளில் உலகில் தம் புகழைப் பாடவேண்டுமாறு அருள்செய்ய, சுந்தரரும் உலகுய்யப் புரம் எய்தவனின் புகழினைப் பல திருத்தலங் கள் தோறும் சென்று பாடுகின்றார். இவ்வாறு இறைவன் புகழ்பாடச் சுந்தரர் மேற்கொண்ட திருத்தலப் பயணத்தைச் சுருக்கி வரைவதே இக்கட்டுரையின் நோக்கம்.

திருநாவலூர் புகல்

'பித்தா பிறைசூடி என்ற திருப்பதிகம் பாடி இறைவனின் புகழைப்பாடிய நற்றமிழ் நாவலர் கோனாகிய சுந்தரர் தம்மை திருவெண்ணெய் நல்லூர்த் திருவருட் டுறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டதன்பின்,

பூவலருங் தடம்பொய்கைத் திருகாவலூர் புகுந்து தேவர்.பிரான் தனைப்பணிந்து திருப்பதிகம் பாடினார்

-பெரியபுராணம்; தடுத்தாட்கொண்ட படலம் 78