பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சமயந்தொறும் நின்ற தையலாள்

திருவதிகைப் புறத்தைச் சென்றணைந்தவர், ஆளுடைய அரசாய், உலகேத்தும் உழவாரப் படையினை உடைய திருநாவுக்கரசர் விடையவனாய சிவனுக்குக் கைத்தொண்டு விரும்பிச் செய்த இப்பதியைக் காலால் மிதித்து நடப்பதற்கு அஞ்சுகின்றதாகக் கூறி அந் நகரினுட் செல்லாமல் மடைவளர்தண் புறம்பணையிற் சித்தவட மடத்திலே புகுகின்றார்.

புகுந்தவர் விரிவளர்பூஞ்சோலைசூழ் மடத்தின்கண் விரிதிரை நீர்க் கெடில வீரட்டானத்து இறைவனது திருப்பாதங்களையே எண்ணிய மனத்தினராய்த் தம் பரிசனஞ் சூழ பள்ளியமர்ந்தருளுகின்றார்.

இவ்வாறு சுந்தரர் துயில்கொள்ள, வீரட்டானத் தமர்ந்தருளுகின்ற அங்கணராய சிவபெருமான் முதுவடி வின் மறையவராய் ஒருவரும் தம்மை அறிய முடியாது வகையில் வேடம் பூண்டு பூந்தாரானாய சுந்தரரின் திருவடியின்மீது தம் பதும மலர்த்தாள் வைத்துப்பள்ளி கொள்வாரைப் பயில்கின்றார். இந்நிலையில் கந்தரர்,

H. H. H. H. H. H. H. H. H. அருமறையோ யுன்னடியென் சென்னியில் வைத் தனை யென்ன

சிவபெருமானும் "திசையறியா வகைசெய்தது என்னு டைய மூப்புகாண்” என விடையிறுக்கத் தன் முடியை அப்பால் வைத்து உறங்குகின்றார் சுந்தரர். மீண்டும் மீண்டும் தன் சென்னியில் இறைவன் தம் தாள்களை நீட்ட

செங்க யில்பாய் தடம்புடை சூழ் திருநாவலூராளி யிங்கென்னப் பலகாலும் மிதித்தனை நீ யாரென