பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F. corr. 43

வினவி நிற்க, கங்கைசடை கரந்த பிராணாய சிவபெரு மான் அறிந்திலையோ எனக் கூறிக்கொண்டே மறைந்து விடுகின்றார்.

'அறிந்திலையோ? எனக் கூறிக் கரந்த இறைவனை அறிந்தவுடன் சுந்தரர்,

செம்மாந்திங் கியானறியா தென்செய்தேன் எனத் தெளிந்து தம்மானை யறியாத சாதி யுளரோ

என வருந்தித்,

தம்மானை திருவதிகை வீரட்டானத் தமர்ந்த கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து

பாடுகின்றார்.

கெடிலம் கடத்தல்

திருவதிகையில் இறைவன் கழல்பணிந்து பாடியவர். பொன்திரளையும், மணித்திரளையும், யானையின் வெண் கோடுகளையும், ஒளி மிக்க வெண்முத்துக்களையும், மணமிக்க மலர்களையும், நறிய சந்தனத்தையும் தன் வலிய திரைகளாற் கொணர்ந்து திருவதிகையை வழிபடும் கங்கையென்னும் திருக்கெடில நதியிலே திளைத்தாடி மேற்செல்கின்றார்.

திருமாணிக்குழி அணைதல்

திருக்கெடிலம் திளைத்தாழப் பெருமான்தன் அடிபோற்றி அங்கிருந்தும் புறப்பட்டு நடுநாட்டுத் வங்களில் 17-வது த ஸ்மாய திருமாணிக் குழியினைச் சென்று சேர்கின்றார். இத்திரு rணிக் குழி திருமால் வழிபட்ட சிறப்பினை உடையது என்பதை,