பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. - 45

உட்சென்றவர் கொன்றை முதலிய மரங்கள் ஓங்கியும் சாதி முதலிய பூங்கொடிகள் நிரம்பியும் நந்தியாவட்டம் முதலிய பூச்செடிகள் நெருங்கியும் உள்ள தூய நந்தவனங் களைப் பணிந்து கொண்டு செல்கின்றார்.

செல்கின்றவர் நான்மறைகளும்துதிக்கும் இத்தலத்தை நாமும் நாளும் வணங்குவோம் என்ற எண்ணத்துடன் கடலானது சூழ்ந்து வளைந்தது போன்ற காட்சி மிக்கதாய் சேட்செலளோங்கும் மஞ்சு இவர் இஞ்சிப் புறத்துள்ள குளிர்ந்த அகழியைக் கண்டுகளிப்பெய்துகின்றார்.

அதன் பின்னர் திருவம்பலத்தின் உள்ளே வண்டுகள் அரற்றவும், அதன் வெளிப்பக்கத்தே அகழியில் மலர்ந்த தாமரையிலிருந்த வண்டுகள் தாழை மலரிற் செறிந்த மகரந்தத்திலே படிந்த மேனியுடையனவாகி அதனாலே புனிதமாய திருநீறு பூசிய சிவனடியார்களைப் போன்ற தோற்றத்தோடு போய்ப் போய் முரல்கின்ற அழகியகாட்சி யினைக் கண்டு மேற்செல்கின்றார். சென்றவர் பிரம தேவரது முகம் என்று சொல்லத்தக்க நிலையில் உள்ள தில்லைத் திருப்பதியின் விளக்கம் மிக்க திருவாயில்கள் நான்கிலே வடக்குத் திருவாயில்முன் சேர்ந்து, அதன் பின்னர் பொன் பிறங்கு மணிமாளிகை நீடும் பொருவிறந்த திருவீதி புகுகின்றார்.

அங்கன் மாமறை முழங்கு மருங்கே

யாட ரம்பையர் அரங்கு முழங்கு மங்குல் வானின்மிசை யைந்து முழங்கும்

வாச மாலைகளின் வண்டு முழங்கும் பொங்கு மன்பருவி கண்பொழிங் தெங்கும்

போற்றிசைக்கு மொழி யெங்கு முழங்குத் திங்கள் தங்கு சடைகங்கை முழங்குங் தேவ தேவர்புரியுந் திருவீதி