பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சமயந்தொறும் நின்ற தையலாள்

என அத் திருவீதியின் சிறப்பைப் புகழ்ந்தேத்துகின்றார் சேக்கிழார் பெருமான்.

இத்தகு சிறப்பு வாய்ந்த, அண்ணலாடும் திருவம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை வணங்கிக்கொண்டு அதன் பின்னர் தேவர்களும் அன்பர்களும் தடையின்றி உள்ளே செல்லும் அழகிய திருவாயில் வணங்கி உச்சிமேற் குவித்த கைகளோடும் உள்ளே புகுந்தார்.

புகுந்தவர் பெரிய மதில்சூழ்ந்த செம்பொன் மாளிகை யையும், பேரம்பல மேருவையும் விதிப்படி வலஞ்செய்து வணங்கிய பின்பு மகிழ்ச்சியோடும் மேலும் சென்று வணங்குதற் பொருட்டு திரு வளரொலிசூழ் திருச்சிற்றம்பல முன் திருவணுக்கண் திருவாயில் சென்று சேர்கின்றார்.

திருவணுக்கண் திருவாயிலை அடைந்தவர் பின் மாலயன் காணாத தன்மைமிக்க இறைவனை உள்ளத்தே நினைந்து அன்பினாலே உந்தப்பட்டுத் திருக்களிற்றுப் படியின் அருகிலே சென்று தாழ்ந்து எழுகின்றார். திருக் களிற்றுப்படியின் மருங்கில், வணங்கி எழுந்தவர்,

இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த

எல்லை யில் தனிப்பெருங் கூத்தின்

இந்த பேரின்ப வெள்ளத்துட் திளைத்து

மாறிலா மகிழ்ச்சியின்

மலர்ந்து கண்களில் ஆனந்தக் கண்ணிர் பொழிய தம் கைகள் இரண்டையும் தலைமேற் கூப்பி,

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருங்டங்

கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு அரியதா மின்பமா