பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§.rary 47

என்று பண்ணினால் நீடி அறிதற்கரிய தேவாரத் திருப்பதிகம் பாடிப் பரவிப் பணிந்து களிக்கின்றார். அப்போது நிருத்தனார் தம் அருளின் காரணமாக, தரளம் எறிபுனல் மறிதிரைப் பொன்னி மடுத்த நீள்வண்ணப் பண்ணையாரூரில் வருக நம்பால்’ என்ற நாதம் கேட்ட வுடன் அதனை உணர்ந்து அப்பணியைச் சென்னி மேற் கொண்டு தமது கைகளால் தொழுது வணங்கிக்கொண்டு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங்கொண்டு வணங்கிப் புறம்போந்து நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரைபோல் நிலையெழு கோபுரத்தைக் கடந்து வணங்கி பின் நீண்ட அகண்ட வீதியை வணங்கிக்கொண்டு. அதன் பின்னர் அத் திருத்தலத்தின் தென்திசை வாயிலைக் கடந்து, தெற்குத் திருவெல்லியை வணங்கிப் பின்னர் கொன்றைவார் சடையான் தன் அருளையே நினைந்த வராய்க் கொள்ளிடத்திருநதியினைக் கடந்து செல் கின்றார்.

கழுமலம் சார்தல்

கொள்ளிடத் திருநதியினைக் கடந்து அறம்பயந்தான் திருமுலைப் பாலுண்டு வளர்ந்தவராய திருஞானசம்பந்தர் பிறந்தருளும் பெரும்பேறுபெற்ற சிறந்த புகழ்க்கழுமலமாந் திருப்பதியைச் சென்று அணைகின்றார்.

அணைந்தவர், பிள்ளையார் திருவவதாரஞ் செய்த திருப்புகலிருள்ளும் மிதியேன்" என்று கூறிக்கொண்டு ஊர் எல்லைப்புறம் வணங்கி வலமாக வருகின்ற போழ்தில் மங்கையிடங் கொள்ளுமால் விடையவனும் அவருக்குக் காட்சி கொடுக்கின்றான். இறைவன் தமக்குக் காட்சி நல்கியதனால் பேருவகை கொண்ட சுந்தரர்,