பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சமயந்தொறும் நின்ற தையலாள்

தெண்டிரை வேலையின்மிதந்த திருத்தோணி புரத்தாசைக் கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி

என்று கூறிக் கொண்டு பண்ணிரம்பிய இன்னிசை உடைய திருப்பதிகம் பாடியருள்கின்றார்.

திருக்கோலக்கா திருப்புன்கூர்ப் பயணம்

இருக்கு ஒலமிடும் பெருமான் எதிர்நின்று எழுந்தருள வெருக்கோனுற்றுப் பின்னது நீங்க திருவாரூர் மேற்செல விரும்பிப் பெருக்கோதம்சூழ் சீகாழிப் பதியை வணங்கிச் செந்தமிழ் மாலைகள் பாடி, தேனார்க்கும் திருப்புன்கூர் நம்பர்பால் சென்று வணங்கித் திருப்பதிகம் பாடிச்சென்று இவ்வாறே இறைவன் எழுந்தருளிய பதிகள் பலவும் வணங்கிச் சென்றுமலர்த்தடம்சூழ காவிரியின் கரையைச் சென்று அணைகின்றார்.

அம்பர்மாகாளத்தி அடைதல்

வம்புலா மலரலைய மணிகொழித்து வந்தழியும் பைம்பொன்வார் கரைப்பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்தாடிப் பின் மயிலாடு துறை மன்னவனை வணங்கிக் கொண்டு சென்று தாவில்சீர் அம்பர்மாகாளத்தி அமர்ந்த பிரான் அடியிறைஞ்சிச் செல்கின்றார்.

திருவாரூர் புகழ்

அம்பர்மாகாளத்தின் அமர்ந்தபிரான் அடிவணங்கிச் செல்பவர் பின்னர் செஞ்சடை யண்ணல் விரும்பு திருப்புகலூரை முன்னாகப் பணிந்தேத்திப் பின் முதல் வனாய இறைவன் தன் அருள் நினைந்து திருவாரூர் புகுகின்றார். அவ்வாறு புகுந்தவரை, “ஆராத காதலன்