பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சுந்தரர் தடுத்தாட்கொள்ளப்பட்ட முறை

தோற்றுவாய்

அளப்பரும் ஆண்டவன் நேர்நின்று ஆடும் ஆட்டத்தைவிட அவன் அடியவர்களின் உள்ளத்தில் நின்று ஆடும் ஆட்டங்கள் இன்பம் நல்குவனவாக அமை கின்றன இறைவனின் திருவிளையாடல்களை விளக்கும் நூலாக அமைந்திருப்பது பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப்பட்ட பெரியபுராணமே இப் பெரியபுராணத்தில் இறைவன் சுந்தரரைத் தடுத்தாட் கொண்ட திருவிளையாடலைப்பற்றிக் காண்பதே இக்

கட்டுரை.

இறைவன் தோற்றம்

அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும், இருங்குழை மகரத்தாலும் இலங்கொளி மணிகளாலும் நெருக்க பீலிச் சோலை நீலநீர்த் தரங்கத் தாலும் கருங்கடல் கிளர்ந்த தென்னக் காட்சியிற் பொலிந்த திருமணப் பந்தரின்முன் மாலும் அயனுக்கும் அரியாகிய சிவபெருமான் சாலுமொழியால் தடுத்து அடிமை கொள்வதற்காகத் தோன்றுகின்றார்.

சிவபெருமான் வழக்குரைத்தல்

பொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவு என்று கூறும்படி யும், அத்தகைய மூப்பெனும் வடிவம் என்று கூறும்படியும்