பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சமயந்தொறும் நின்ற தையலாள்

மைய்த்தநெறி வைதிகம் விளைந்த முதலேயோ என்று கூறும்படியும் வேடமுற்று வந்த திங்கள் சடைக் கரந்த பிரானாய சிவபெருமான் பந்தர் முன் அடைகின்றார். மாமறை விதிவழாமல் நடைபெறும் அத் திருமணத்திற்கு வருகை தந்த பெரியவர்களின் முன் சென்று

இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும்

என்று கூறுகின்றார். உடனே சபையில் இருந்த மறை யவர்களும் மன்றல் மடங்கலனையானாய சுத்தரரும்

கின்ற திவணிர் மொழிமின் னிர் மொழிவது

எனக் கேட்கின்றனர். கேட்ட அளவில் கண்ணுதவ கடவுளாய சிவபெருமான்

என்னிடையும் கின்னிடையும் நின்ற இசைவால் யான் முன்னுடைய தோர் பெருவழக்கினை முடித்தே நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி

எனக் கூறுகின்றார். சிவபெருமான் இவ்வாறு கூறக்கேட்ட அளவில் சுந்தரரும் அவ்வழக்கினை முடித்தல்லது வதுவை செய்யேன் எனக் கூறித் தங்கள் இருவருக்கும் உள்ள வழக்கு என்ன என்று சுந்தரர் கேட்கின்றார்.

வழக்கு இன்னதென்று உரைத்தல்

சுந்தரர் மறையவன் வேடமிட்டு வந்த சிவபெருமா

னிடம் வழக்கு இன்னதென்பதை முற்றச் சொல்லுக

என்று கேட்ட அளவில் தேவரையும் மாலயன் முதல்

திருவின் மிக்கோர் யாவரையும் வேறடியாக உடைய சிவபெருமான் சபையோர்களை நோக்கி,