பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சமயந்தொறும் நின்ற தையலாள்

பேசுகின்ற இப்பேச்சை நாங்கள் முதலில் இப்போதுதான் கேட்கின்றோம். நீரென்ன பித்தனோ? என வினவு கின்றார். உடனே இறையவனாய சிவபெருமான்,

பித்தனுமாகப் பின்னும் பேயனுமாக யிேன் றெத்தனை தீங்கு சொன்னால் யாதுமற்றவற்றால் நாணேன் அத்தனைக் கென்னை யொன்று மறந்திலை யாகில் நின்று வித்தகம் பேசா வேண்டாம் பணிசெய்ய வேண்டும்

எனக் கூறுகின்றார். இதைக் கேட்ட அளவில் சினமுற்ற சுந்தரர் மறையவனாய சிவபெருமானை நோக்கி ஒலை காட்டுமாறு வேண்டுகின்றார்.

சுந்தரர் ஒலையைக் கிழித்தெறிதல்

റ്റുതെ ഖ காட்டென்று நம்பியுரைக்க, சிவன் அவ்வோலையை அவைமுன் காட்டி, நிற்கின்ற வேளையில் இறைவனைத் தொடர்ந்து சென்று ஆளோலை வாங்கி அந்தணரை அடிமையாக்குதல் என்ன முறை? என்று கூறி அவ்வோலையைக் கிழித்து எறிந்து விடுகின்றார்.

மறையவர் முறையிடல்

தன்னிடமிருந்த ஒலையை வாங்கிக் கிழித்தெறிந்த அளவினில் அவர் செப்த காரியம் முறையோ என்று முறையிட்ட அளவில் இச்சபையின் கண்ணிருந்த மறைய வர்கள் மறையவன் வேடத்திலிருந்த சிவபெருமானை வாழுமிடம் குறித்து வினவுகின்றனர். வினவிய நிலையில் தான் வாழுமிடம் வெண்ணெய் நல்லூர் என்று கூறி,

of H. H. H. H. அறத்தாறின்றி வன்றிறல் செய்தென் கையிலாவணம் வலியவாங்கி கின்றிவன் கிழித்துத் தானே கிரப்பினான் அடிமை