பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா 59

என்று முறையிடுகின்றார். உடனே அம்மறையவர்கள் இவ்வழக்கினை வெண்ணெய் நல்லூரில் பேசலாம் என வழக்கினைத் தள்ளி வைக்கின்றனர். உடனே சிவபெருமா னும் வெண்ணெய்நல்லூரில் மூல ஓலை காட்டி சுந்தரர் தனக்கு அடிமை என்பதைச் சாதிப்பன் என்று கூறி வெண்ணெய்நல்லூர் நோக்கிச் செல்கின்றார்.

வெண்ணெய்நல்லூரில் வழக்காடுதல்

வெண்ணெய் நல்லூர் சென்று தன் வழக்கினைக் கூறிய அளவில் அங்கிருந்தவர்கள் அந்தணர் அடிமை யாதல் இந்த மாநிலத்தில் இல்லை எனக் கூறியவுடன் சுந்தரர் ஒலையைக் கிழித்தது ஒன்றே அவர் தனக்கு அடிமைஎன்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூறி மேலும் அந்த ஒலை சுந்தரரின் பாட்டனார் தனக்கு எழுதிக் கொடுத்த ஒலை எனக் கூறுகின்றார்.

உடனே சுந்தரர் ஆதி சைவர் என்று இந்தச் சபையில் உள்ள அனைவரும் அறிவர் என்று கூறி,

தனக்கு வேறடிமையென்றி வந்தணன் சாதித்தானேல்

மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயையென்சொல்லு

கேன்யான்

எனக்கிது தெளிய வொண்ணாதென்று

கூறுகின்றார். உடனே சபையில் இருந்தவர்கள் மறைய வனாய சிவபெருமானை நோக்கி இவ்வுலகின்கண் நீயின்றி வரை யுன்னடிமையென்ற வெவ்வுரை யெம்முன்பு ஏற்ற வேண்டும்' என்று கூறி மீண்டும்,

ஆட்சியில் ஆவணத்தி லன்றி மற்றயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்